சிபிஎஸ்இ பன்னிரண்டாவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பதிவு செய்த நாள் : 13 ஜூலை 2020 15:35

புதுடெல்லி

சிபிஎஸ்இ 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மொத்தம் 88 .8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் 8 3.4 சதவீதம் ஆகும்.

சென்ற ஆண்டை விட கூடுதலாக ஐந்து சதவீதம் பேர் 2020 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எந்த பாடத்துக்கும் முதல் இரண்டு மூன்றாவது இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

400 மாணவர்களுக்கான முடிவுகள் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.

தேர்வு நடத்தப்படாத பாடங்களில் கூடுதல் மதிப்பெண் வாங்க முடியும் என்று நம்புவோர் விரும்பினால் அந்த தேர்வுகளை எழுதலாம் .அந்த தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டு யாரும் கையில் ஆகி விட்டதாக அறிவிக்கப் படவில்லை மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்கள் என அவர்களுக்கு  சிபிஎஸ்இ பெயர் தந்துள்ளது.

இந்திய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் அவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகம் மாணவியர் 92% வெற்றி பெற்றுள்ளனர் மாணவர்களின் 86 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தேர்வு மதிப்பெண்களை பொறுத்தமட்டில் தெற்குப் பிராந்தியம் கூடுதல் மதிப்பெண்களை பெற்றுள்ளது திருவனந்தபுரம் பெங்களூரு சென்னை ஆகிய வைத்து தேர்ச்சி விகிதம்  95 சதவீதத்திற்கு கூடுதலாக உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது இங்கு 94 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.