கன மழை வெள்ளம் காரணமாக ஜப்பானின் கைசு தீவிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்.

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 20:18

டோக்கியோ

ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள தீவு எங்கு தொடர்ச்சியாக பெய்யும் கனமழை வெள்ளம் காரணமாக 15 பேர் இதுவரை உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது 9 பேரை பற்றி எந்த தகவலும் இல்லை இந்நிலையில் அத்தீவில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வருவதாலும் அங்கு உள்ள வீடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேறும்படி ஜப்பான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குமாமோட்டோ.ககோஷிமா ஆசிய பகுதிகளில் உள்ள 92 200 வீடுகளுக்கு வெள்ள அபாயம் இருப்பதால் அந்த வீடுகளில் வசிப்போர் வெளியேற வேண்டுமென்று அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமையும் இப் பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்திருப்பதால் மக்கள் உயர்ந்தபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் அபே செய்தி விடுத்துள்ளார்.

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை மீட்கும் பணியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார் இப்பகுதியில் போடும் குமார் என்ற நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து கரை உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறதே ஒரு பாலமும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்று ஜப்பானிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.