புதிய ஆப்ஸ்களை உருவாக்கவும் பழைய ஆப்ஸ்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 20:03

புதுடெல்லி

புதிய ஆப்ஸ்களை உருவாக்கவும் பழைய ஆப்ஸ்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதல் இந்நோவேஷன் மிஷன் உடன் இணைந்து செயல்படும்.

இந்தப் பணி இரண்டு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒன்றில் ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவில் உள்ள தரமான ஆப்ஸ்கள் கண்டறியப்படும்.

இரண்டாவது துறையில் புதிய ஆப்ஸ்களை உருவாக்குவதற்கான ஆதரவு பணிகள் மேற்கொள்ளப்படும் புதிய தொழில்நுட்ப தரம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான கருத்து அவர்களுக்கு பணிபுரிவதற்கான இன்கியூபேஷன் மாதிரி உருவாக்குதல் உருவாக்கப்பட்ட ஆப்ஸை வெளியிடுதல் அந்த ஆப்ஸுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்க உதவுதல் ஆகிய பணிகளை இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளும்.

இவற்றைத்தவிர ஏற்கனவே உள்ள ஆப்ஸ்களை ஊக்குவிக்கவும் ஏற்கனவே உருவாக்கி இயங்கிக் கொண்டிருக்கிற இணையதளம் மேடைகளை பிரபலப்படுத்தும் அரசு உதவி செய்யும் இந்த இந்த ஆப்ஸ்களும் இணையதள மேடைகளும் ஆன்லைன் கல்வி வீட்டில் இருந்தபடி பணிபுரிதல் வீட்டில் இருந்தபடி வர்த்தகம் செய்தல் பொழுதுபோக்கு அலுவலக சேவைகள் மற்றும் சமூக இணைப்புக்கான பணிகள் ஆகிய ஆட்சிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

இந்தப் பணிகளை சுயசார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான புதுமை சவால்களாக ஐடி துறையில் உள்ளவர்கள் ஏற்று பணியில் இறங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி லிங்கெடுஇன் -னில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்

இந்தியா முழுக்க இப்பொழுது சுயசார்புள்ள பாரதத்தை உருவாக்குவோம் பணியில் முனைந்துள்ளது. புதிதாக தொழில் துவங்கி அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் நம்முடைய தொழில்நுட்ப சூழலை மேம்படுத்தவும் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் நம்முடைய இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்ஸ்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் இந்தியாவில் புதிய ஆப்ஸ்களை உருவாக்க  சிறந்த வாய்ப்பாகவும் இந்த சந்தர்ப்பம் அமையும்.

ஐடி துறையில் இருந்த தேவையை பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பு, அவர்களுக்கு உதவவும், அதன் மூலம் நம்முடைய மார்க்கெட் தேவைகளை பூர்த்தி செய்யவும் நாம் உலகில் போட்டியிட உதவும் ஆப்ஸ்களை உருவாக்க இயலும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஐடி துறை நிபுணர்களுக்கும் ஐடி துறையில் புதிதாக துவக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் சனிக்கிழமையன்று  இந்திய சுயசார்பு புதுமைச் சவாலை வெளியிட்டார்.