ஆமதாபாத் மருந்துக் கம்பெனியின் கரோனாவாக்சின் மனித சோதனைகளுக்கு அனுமதி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 16:46

ஆமதாபாத்

ஆமதாபாத் நகரில் உள்ள ஷைடல் காடில்லா என்ற மருந்து கம்பெனி தயாரித்துள்ள கரோனா வைரஸ் வாக்சினை மனிதர்களிடத்தில் செலுத்தி சோதனை செய்ய இந்திய டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் விஜி சோமனி அனுமதி வழங்கியுள்ளார்.

காடில்லா நிறுவனம் வாக்சினுக்கு எம்ஆர்என்ஏ வாக்சின் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வாக்சின் சோதனைகளை விரைவாக முடித்து வாக்சினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி கரோனா வைரஸ் நிபுணர்குழு மருந்து கம்பெனியிடம் கோரியுள்ளது..

இந்த வாக்சின் மிருகங்கள் மீது பயன்படுத்தி சோதனைகள் செய்யப்பட்டதாகவும் சோதனைகள் சிறப்பான பலனைத் தந்து இருப்பதாகவும் மருந்து கம்பெனி சோதனை முடிவுகளை இந்திய டிரக்ஸ் கண்ட்ரோலர் ஜெனரலிடம் சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து இந்த வாக்சினை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மருந்துக் கம்பெனி கூறியது. அதைத்தொடர்ந்து கடந்த வியாழனன்று இந்தியர் டிரக் கண்ட்ரோலர் சோமானி  இந்த வாக்சினை மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகள் நடத்த அனுமதி வழங்கினார்.

இரண்டு நிலைகளில் நடத்தப்படும் இந்த சோதனைகளை முடிக்க குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்று காடில்லா நிறுவனம் கூறியுள்ளது.