இந்திய அரசு தடை செய்யும் முன் டிக் டாக் கம்பெனி கடிதம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 14:02

புதுடெல்லி

சீன கம்பெனிகளால் உருவாக்கப்பட்ட 59 ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்த இடைக்காலத் தடை உத்தரவு ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு வெளியாவதற்கு ஒருநாள் முன்பு டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெவின் மாயென் கடிதம் ஒன்றை இந்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.

அந்தக் கடிதத்தின் பிரதி ராய்டர் மற்றும் லைவ் மின்ட் பத்திரிகைகளுக்கும் கிடைத்துள்ளன. அந்தக் கடிதத்தை அவைகளும் வெளியிட்டுள்ளன விவரம்:

டிக் டாக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்ட பகுதியில் 100 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இந்நிறுவனத்தின் செயலிகளை பயன்படுத்துவோர் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கின்றனர். இந்த நிறுவனத்தில் இந்தியாவில் 3500 நேரடி தொழிலாளர்களும் மறைமுக தொழிலாளர்களும் உள்ளனர். டிக் டாக் செயலி 14 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில டிக் டாக் பயன்படுத்துவோர் பற்றிய  புள்ளிவிவரங்கள் சிங்கப்பூரில் உள்ள சர்வரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திட்டச் செயலியை பயன்படுத்துவோர் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை இதுவரை சீன அரசு எங்கள் நிறுவனத்திடம் கேட்டதில்லை.

இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் பற்றிய புள்ளி விவரங்களை சிங்கப்பூர் சர்வரில் இருந்து இந்தியாவில் உள்ள மையம் ஒன்றுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது என திட்ட தலைமை நிர்வாகி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இத்தகைய கடிதம் ஒன்று இந்திய அரசுக்கு திட்ட நிர்வாகம் அனுப்ப வேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. அந்த கடிதத்திற்கான காரணம் குறித்து டிக் டாக் நிர்வாகமோ அல்லது இந்திய அரசோ எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

தடைக்கு முன்னதாகவே டிக் டாக் நிர்வாகம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிக் டாக் மீதான தடையை இந்திய அரசு விலக்கிக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று மத்திய சட்ட நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். சீனாவின் 59 ஆக்ஸ் காரணமாக இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அரசு கருதுவதால் இந்த ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்தது முற்றிலும் சட்டப்படியான நடவடிக்கையாகவே கருதப்படும் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட காரணத்தினால் அந்த செயலிக்கு போட்டியாக இந்தியாவில் விளங்கிய ரோபோஸோ என்ற செயலி 48 மணி நேரத்தில் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி 70 லட்சம் அளவுக்கு கூடுதலாக பெற்றுள்ளது. இந்த நிலையில் டிக் டாக் மீதான இடைக்காலத் தடையை உடனடியாக இந்திய அரசு விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை.

இடைக்காலத் தடை தொடர்ந்து தடை செய்யப்பட்ட சீன ஆப்ஷன்களில் நிர்வாகிகள் அடுத்த வாரம் இந்திய அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.