உலகு சந்திக்கும் வித்தியாசமான சவால்களுக்கு தீர்வு காண புத்தரின் கொள்கைகள் வழிகாட்டும்: மோடி செய்தி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 12:47

புதுடெல்லி

தம்ம சக்கர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்பொழுது இன்றைய உலகில் சந்திக்கும் வித்தியாசமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண புத்தரின் எட்டு அம்ச கோரிக்கைகள் வழிகாட்டியாக அமையக் கூடும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தம்ம சக்கர தின நிகழ்ச்சியில். பேசும்போது 

புத்தரின் கொள்கைகள் மிகவும் எளிமையானவை அதுபோல அவரின் செயல்களும் எளிமையானவை அவருடைய கொள்கைகளை செயல்களும் பரிவு இறக்கம் ஆகிய பண்புகளை உள்ளடக்கமாகக் கொண்டவை. 

இன்றைய உலகு மிகவும் வித்தியாசமான சவால்களை சந்திக்கிறது. இந்த சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கு உதவியாக புத்தரின் வழிகாட்டுதல் அமையக்கூடும்.  அவை இன்றைய சூழ்நிலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பொருத்தமானவை என்று மோடி குறிப்பிட்டார்.

 புத்தரின் கொள்கைகள் இன்று மட்டுமல்ல எதிர்காலத்துக்கும் பொருத்தமான வகைகளாக திகழ்கின்றன என்று மோடி குறிப்பிட்டார் .

தம்ம சக்கர தினம் அஸ்த பூர்ணிமாவையொட்டி நடத்தப்படுவதாகும்.