செவ்வாய் கிரகத்தின் நிலவு போபோஸை மங்கள்யான் படம் பிடித்தது

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 12:39

பெங்களூரு

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை 2013ல் ஏவப்பட்ட இந்தியாவின் மங்கள்யான் செயற்கைக கோள் மிக நெருக்கத்தில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.

சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலம், 6 மாத காலம் மட்டுமே இயங்க வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 6 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவு போபோஸ். அதன்  படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மார்ஸை சுற்றிவர அனுப்பப்பட்ட  செயற்கைக கோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது

ஜூலை 1 ம் தேதி இந்தியாவின் மங்கள்யான் செயற்கைக் கோள்  செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டதாக. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்டோக்னி. போபோஸின் மிகப்பெரிய பள்ளம் ஸ்டோக்னி,  மற்ற பள்ளங்கள் ஷ்க்லோவ்ஸ்கி, ரோச் மற்றும் கிரில்ட்ரிக். எல்லா பள்ளங்களும் இந்த படத்தில் காணப்படுவதாக இஸ்ரோ கூறி உள்ளது.

போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய படிமங்ககளால் ஆனது என்று நம்பப்படுகிறது.