இந்திய - பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து சீன - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 12:34

புதுடெல்லி

இந்தியாவுக்கு எதிராக உள்ள பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய இப்பகுதியில் உள்ள நிலவரம் குறித்து பாகிஸ்தான் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

பாகிஸ்தானிலும் சீனாவிலும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூட்டறிக்கை வெள்ளிக்கிழமையன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது இந்தியாவின் முரட்டுத்தனமான போக்கும் அதன் என்னை பிடிக்கும் கொள்கைகளும் அமைதிக்கு விரோதமாக அமைந்து உள்ளன என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மனித உரிமை மீறல்கள் அடிக்கடி நடக்கின்றன அங்கு வாழும் மக்களின் குடியுரிமை மாற்றுவதற்கான சட்டங்கள் உத்தரவுகள் சங்கத்தில் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை சீன வெளியுறவு அமைச்சர் வாங்கி இடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்ததாக பாகிஸ்தான் அறிக்கை கூறுகிறது.

சீன பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் தெரிவித்தார் தகவல்களுக்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் கூறியதாக வெளியிடப்பட்ட செய்தி விவரம் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளின் பொது நலன்களையும் இரு நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சமாளிக்க இரு நாடுகளும் கூட்டாக பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அது தவிர இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

 நீண்ட காலமாக சீனாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இயங்கி வந்துள்ளன. இது நாடுகளின் பொதுவான அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான விஷயங்களில் ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு ஆதரவாக உறுதியாக செயல்பட்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

சீன பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் காஷ்மீர் பற்றி விவாதித்ததோடு ஆப்கானிஸ்தான் தெற்காசிய பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை கூறுகிறது.

எல்லையில் கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவும் இந்த நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் சீன வெளியுறவு அமைச்சரும் தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டு அதனடிப்படையில் கூட்ட அறிக்கை வெளியிட்டிருப்பது பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைத்து செயல்பட தயாராகிவிட்டன என்பதையே காட்டுகிறது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.