வுகான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி சீனா கூறவில்லை: உலக சுகாதார நிறுவனம் செய்தி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 12:31

ஜெனிவா

சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கு சீன அரசு அல்லது  ஹூபே மாகாண அரசோ தகவல் தெரிவிக்கவில்லை. அந்தத் தகவலை சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் கிளை தான் முதலில் ஜெனிவாவில் உள்ள தலைமையகத்துக்கு தெரிவித்தது என்று இப்பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தோன்றி பரவியது பற்றி சீன அரசு முன்கூட்டியே தகவல் தரவில்லை அவ்வாறு தகவல் முன்கூட்டியே தந்திருந்தால். உலக நாடுகளில் ஏற்பட்ட உயிர் இழப்புகளை தவிர்த்து இருக்கலாம்.

கரோனா வைரஸ் புற்றுநோயாக உலக நாடுகளில் பரவிய தையும் தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்குற்றம் சாட்டியிருந்தது.

அப்பொழுது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் பரவும் வைரஸ் தோன்றி பரவியது பற்றி சீனாவில் இருந்து தகவல் வந்தது என்று கூறியிருந்தது சீனாவில் இருந்து தகவல் தந்தது யார் என்று அப்பொழுது குறிப்பிடவில்லை இப்பொழுது சீனாவிலிருந்து உலக சுகாதார நிறுவனத்தில் தகவல் தந்தது உலக சுகாதார நிறுவனத்தின் கிளை அமைப்பு என்று கூறியுள்ளது.