பாகிஸ்தான் சீக்கிய யாத்திரீகர்கள் வேன்- ரயில் மோதல்: 21 பேர் பலி

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020 20:11

பெஷாவர்

பெஷாவர் நகரிலுள்ள சீக்கியர்கள் புனித தலங்களுக்கு யாத்திரை சென்றுவிட்டு வேன் ஒன்றில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அந்த வேன் ஷேக்புரா என்ற இடத்தில் கராச்சி - லாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியது. வேனில் இருந்த சீக்கிய யாத்திரீகர்கள் 21 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

வேனில் மொத்தம் 26 பேர் பயணம் செய்தார்கள் மீதம் உள்ள 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் மருத்துவமனைகளில் உடனடியாக சேர்க்கப்பட்டனர்.

ஷேக்புரா என்ற இடத்தில் ரயில்வே கேட் அடைப்பதற்கு முன்னாள் செல்ல விரும்பிய வேன் டிரைவர் குறுக்குவழியில் சென்றதாக போலீசார் தெரிவித்தனர் குறுக்கு வழியில் தண்டவாளத்தை வேன் கடக்கும் பொழுது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.