வெளிநாட்டு இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்திய விதிகளை மீறக்கூடாது: அரசு தகவல்

பதிவு செய்த நாள் : 02 ஜூலை 2020 21:09

புதுடெல்லி

இந்தியாவில் இன்டர்நெட் டெக்னாலஜி துறை உள்பட அனைத்துத் துறையிலும் முதலீட்டை இந்தியா வரவேற்கிறது. இன்டர்நெட் டெக்னாலஜி துறையில் இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய விதிகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்திய சீன ராணுவ படைத் தலைவர்களும் தூதரகங்களின் உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எல்லையில் பதட்டத்தை குறைக்கவும் எல்லைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணவும் இந்த முயற்சிகள் தொடர்ந்து இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அனுராக் குறிப்பிட்டார்.

சீன நிறுவனங்கள் உருவாக்கிய 59 ஆப்ஸ்களை இந்தியா தடை செய்திருப்பது பற்றி கேட்ட பொழுது.

முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் முழுக்க திறந்த பாங்குடன் இயங்கிவருகிறது. அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டு முதலீட்டை இந்தியா வரவேற்கிறது ஆனால் இந்தியாவில் இயங்கும் இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்திய விதிகளுக்கு இணக்கமாக இயங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இழப்பீட்டுக்கு உரியது

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கேரள கடல் பகுதியில் உள்நாட்டு இந்திய மீன்பிடி படகு அந்தோணி மீது இத்தாலி கப்பலான காலக்ஸி மோதி இந்திய படகுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக இந்திய படகுக்கு இத்தாலி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்தியா கோரியது.

இந்த பிரச்சனை குறித்து தீர்ப்பு வழங்க ஆர்பிட்டரி  டிரிப்யுனல் அமைக்கும்படி இத்தாலி கோரியது. அதன்படி ஆர்பிட்டரி  டிரிப்யுனல் அமைக்கப்பட்டது அந்த டிரிப்யுனல் இன்று தீர்ப்பு வழங்கியது.

இழப்பீடு கோர இந்தியாவுக்கு உரிமை உள்ளது எனவே இரு நாடுகளும் இழப்பீடு குறித்து பேசி ஒரு சமாதானமான முடிவுக்கு வர வேண்டும் என்று தனது தீர்ப்பில் ஆர்பிட்டரி  டிரிப்யுனல் கூறியது.

பேச்சுவார்த்தை முடிவு குறித்து இருநாடுகளும் மீண்டும் ஆர்பிட்டரி  டிரிப்யுனல் அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகும்.