மியான்மர் மாணிக்க கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 பேர் மரணம்

பதிவு செய்த நாள் : 02 ஜூலை 2020 15:08

ரங்கூன்

மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் மதிப்பு மிகுந்த மாணிக்கக் கற்களை தோண்டிக் கொண்டிருந்த பொழுது கனமழை காரணமாக தேங்கி இருந்த நீர் பூமிக்குள் இருந்து சுரங்கத்துக்குள் சேறாக வெளியேறியது..

இந்த சேறு சுரங்கத்திற்குள் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை புதைமணலில் அழுத்தியது அதன் காரணமாக சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

மியான்மர் நாட்டில் கச்சின் மாகாணத்தில் பல இடங்களில் ரத்தின சுரங்கங்கள் உள்ளன அவற்றில் ஹப்பாகாண்ட் என்ற இடத்தில் விலை உயர்ந்த பச்சை இரத்தினக்கற்கள் கிடைக்கின்றன.

இப்பகுதியிலுள்ள சுரங்கங்கள் எல்லாம் தொழில்நுட்ப முறைப்படி அமைக்கப்பட்டது அல்ல சுரங்கங்களை தூண்டுகோல் தம் விருப்பப்படி தோன்றுவது வழக்கம் அதனால் இங்கு சுரங்க விபத்துகளும் அடிக்கடி நடப்பது இயல்பாக உள்ளது.