ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமல்: எதிர்ப்பு தெரிவித்த 100 பேர் கைது

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2020 14:45

ஹாங்காங்

ஹாங்காங் நகரில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது .இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்தும்  ஹாங்காங்கின் 23ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் பேரணி நடத்த கூடிய நூற்றுக்கு மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் பெய்ஜிங் நகரில் சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது .செவ்வாய் அன்று இரவு ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது .அதைத்தொடர்ந்து ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி காரி லாம் தெரிவித்தார்.

ஹாங்காங் நகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க  ஹாங்காங் நிர்வாகம் தேசியப் தவறிய காரணத்தினால் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது அந்த நிர்வாகத்தின் மீது சீன அரசுக்கு இன்னும் முழு நம்பிக்கை இருக்கிற காரணத்தினால் அந்த சட்டத்தை அமுல் செய்யும் பொறுப்பை ஹாங்காங் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

தனது பணியை நிர்வாகம் முறையாக நிறைவேற்றும் என்று லாம் கூறினார்.

ஹாங்காங் நகரின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கண்டித்தும் அந்த நகரின் 23 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பேரணி நடத்த கூடியவர்கள் புதிய பாதுகாப்புச் சட்டத்தை பரிட்சை பார்க்கக்கூடாது என்று லாம் எச்சரித்தார்

.நகரத் தெருக்களில் போலீசார் மக்களை க்கூடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். தெருக்களில் கூடியவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது.

 மக்கள் மீது மிளகுப் புகை குண்டுகளையும் போலீசார் சுட்டனர். பே பார்க் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர் கூட்டத்திலிருந்த சிலர் அமெரிக்க கொடியை ஏந்தி இருந்தனர் .தேசிய பாதுகாப்பு சட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி சீன அரசை அமெரிக்க அரசு நிர்பந்திக்க வேண்டும் அதை வலியுறுத்துவதற்காகவே அமெரிக்க கொடியை நான் ஏந்தி இருக்கிறேன் என்று ஒருவர் தெரிவித்தார் .அந்நகர சுதந்திரத்தை குறிக்கும் சுதந்திரக் கொடியை ஏந்தியிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர் .வேறு இடங்களில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனர்.. வேறு நீங்கள் பங்கு கொண்ட 70 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.