சேனல் செய்திகள்(01.07.2020)

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2020

இளையராஜா   பாடல்கள்!

  இன்னிசை  மெட்டுகள்’   இசை  நிகழ்ச்சி  திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கும், இரவு  7  மணிக்கும்  வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

          1980, 90களில்  தன் இசையால் ஒட்டுமொத்த இளம்  இசை ரசிகர்களையும் கட்டிப்போட்ட    இளையராஜாவின் பாடல்கள்  ஒளிபரப்பாகின்றன.  அரை மணி நேரத்தை  நொடிப்பொழுதில்  கழிக்கும் உணர்வை  இது  எற்படுத்தும்.   மெகா ஹிட்  பாடல்களாக தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.


  ½  மணி  நேரத்தில் 100   செய்திகள்!

 நியூஸ்  7  தமிழில்  ‘நான் ஸ்டாப்  100’   செய்தி  தொகுப்பு           தினமும்  காலை  8 மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

டேப்னி, தேவேந்திரன் ஆகியோர்  தொகுத்து வழங்குகின்றனர்.

               வழக்கமான செய்தி வடிவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள விவகாரங்கள், வைரல் வீடியோக்கள், குற்ற  சம்பவங்கள், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல், பயனுள்ள தகவல்கள், தமிழக நிகழ்வுகள், தேசிய  செய்திகள், சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு பிரிவுகளின்கீழ்  100  செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டு   நவீன வரைகலை  தொழில்நுட்ப  உதவியுடன்               வழங்கப்படுகின்றன.

இவற்றை   www.ns7.tv  என்கிற  நியூஸ்  7  தமிழ்  இணையதளத்திலும்,  யூ  டியூபிலும்  பார்க்கலாம்.

 

 ஜாதகம்,  வாஸ்து,  ராசி பலன்!


 நேரம் நல்ல  நேரம்’  புது  யுகம் டிவியில்  தினமும் காலை 7 மணியிலிருந்து  8.10 மணி வரை ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி  தொகுப்பு :-  ரேகா,  சரண்யா.

            ஜாதகம், வாஸ்து, எண் கணித  பலன்களை ஜோதிடரிடம் கேட்டறியும்  நேரலை பகுதியும்,  பன்னிரண்டு ராசிகளுக்கான பொது பலன்கள் மற்றும் ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ளும்  ராசி பலன் பகுதியும்  இதில் இடம்பெறுகின்றன.


 சுவாரஸ்யமான  செய்தி  தொகுப்பு!

 சத்தியம்  டிவியில்  ‘பத்துக்கு  10  செய்திகள்’  திங்கள் முதல்  வெள்ளி வரை காலை  10  மணிக்கு ஒளிபரப்பாகிறது.  ஒவ்வொரு  நாளும் அன்றைய முக்கிய செய்திகள் முழு  தகவல்களுடன் ஒரு தொகுப்பாக வழங்கப்படுகின்றன.

ராஜேஸ்வரி,  சாலமோன் இருவரும்   தொகுத்து வழங்குகின்றனர்.

             நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள், அரசியல் நிலவரங்கள், மக்களின் அடிப்படை பிரச்னைகள் என அனைத்தும்  ஒன்றுவிடாமல்  தெரிவிக்கப்படுகின்றன.  இடைவிடாத தொடர் நேரலை, சிறப்பு விருந்தினர்களுடன் சுவாரஸ்யமான உரையாடல் போன்றவை  பட்டியலிட்டு காட்டப்படுகின்றன.