குமரி மாவட்டத்தில் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2020 12:05

கன்னியாகுமரி

கொரோன ஊரடங்கு காலகட்டத்தில் ரயில்வே துறை பயணிகள் மத்தியில் மீண்டும் சுமையை ஏற்படுத்தும் விதமாக 200 கி.மீக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில்வேதுறை நஷ்டத்தில் இயங்குவதால் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு விழிமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. இதன்படி தற்போது 200 கி.மீ தூரத்துக்கு மேலாக இயங்கும் பயணிகள் ரயில்களை அனைத்தையும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் முதலில் மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூர்க்கு இயக்கப்படும். இரவு நேர பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று கொரோன ஊரடங்கு முன்பாகவே அறிவிப்பு வெளியாகி ஜுலை 1-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும் என்றும் முன்பதிவும் துவங்கியது. 

இந்த ரயில்தான் தெற்கு ரயில்வே மண்டலத்துக்குள் இரவு நேரத்தில் முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கி வந்த ஒரே ஒரு பயணிகள் ரயில் சேவை ஆகும். இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தெற்மேற்கு, தென்மத்திய ரயில்வே மண்டலங்களில் இது போன்ற பல இரவு நேரத்தில் இயங்கும் பயணிகள் ரயில்கள் இயங்கிவந்தன் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மாதம் இரண்டாவது ரயிலாக நாகர்கோவில் - கோயம்பத்தூர் பகல்நேர பயணிகள் ரயில்,

கோவை – மங்களுர் பயணிகள் ரயில்,

காரைக்கால் - பெங்களுர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் அறிவிப்பு வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது ரயில்வேத்துறை அகில இந்திய அளவில் அனைத்து ரயில்வே மண்டலங்கள் வாரியாக 200 கி.மீக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. 

குமரி மாவட்டத்தில் மூன்றாவது ரயிலாக நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் இந்த அறிவிப்பின் படி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படஇருக்கின்றது.

பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் போது பயண கட்டணம் அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிப்பதால் பயணிகளின் எண்ணிக்கை படிபடியாக வெகுவாக குறையும். பயணிகள் கட்டண அதிகரிப்பு என்ற சுமை அறிவிக்கும் போது பயணிகள் வசதிக்காக இந்த ரயில்களை வேகத்தை அதிகரித்து அடுத்த ஊர்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.  இதனால் பயணிகள் தீமையிலும் ஓர் நன்மை இருக்கின்றது என்று மகிழ்சிஅடைவார்கள். இது மட்டுமில்லாமல் வேகத்தை அதிகரிக்கும் போது பயணிகள் விரைவாக குறைந்த பயண நேரத்தில் தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியும். இது பயணிகளுக்கு மிகவும் நன்மை பயணக்கும் செயலாக முடியும்.

1. மதுரை – புனலூர் பயணிகள் ரயிலை திருச்சி அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தற்போது தென்மாவட்டங்களிலிருந்து இந்த பகுதிக்குச் செல்ல நேரடி ரயில் வசதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

2. நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் ஒரு மார்க்கம் எர்ணாகுளம், மறுமார்க்கம் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

3. திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

4. விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில் ஒரு மார்க்கம் திருநெல்வேலியும் மறுமார்க்கம் தாம்பரம்  வரை நீட்டிப்பு

5. திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை தாம்பரம் வரை நீட்டிப்பு முன்பதிவு

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ரயில்களில் குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைத்து முன்பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க முடியும் ரயில்வேத்துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.

வேகத்தை அதிகரித்தல்:-

இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 45 முதல் 55 வரை வேகத்தில் இயக்க வேண்டும். சூப்பர்பாஸ்டு ரயில்களின் வேகத்தை தற்போதைய வேகமான மணிக்கு 55 கி.மீ வேகத்திலிருந்து 65 கி.மீ வேகமாக அதிகரிக்க வேண்டும்.

தீமைகள்:

1. பயண கட்டணம் அதிகரித்து எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

2. போதிய வருவாய் இல்லை என்று கூறி சிறிய ரயில் நிலையங்களின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படும்.

3. ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்வதால் போதிய வருவாய் இல்லை என்று கூறி ஒருசில ரயில்நிலையங்கள் மூடப்படலாம்

4. இனி புதிய நெடுந்தூர பயணிகள் ரயில்கள் இயக்கமாட்டார்கள். அதிலும் மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றம் செய்த பிறகு பயணிகள் ரயில்களை இயக்கமாட்டார்கள்.

5. சிறிய கிரமங்களில் உள்ள பயணிகள் பயணம் செய்ய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.

6. இந்த ரயில்களில் அதிக கட்டணம் இருப்பதால் கிராம பயணிகளின் எண்ணிக்கை படிபடியாக குறையும்.

7. அடுத்த கட்டமாக அதிக கட்டணம் வசூலிக்கும் பொருட்டு 150 கி.மீ தூரம் உள்ள பயணிகள் ரயில்கள் 50 கி.மீக்கு மேல் உள்ள ஊர்களுக்கு நீட்டிப்பு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது.  இது போன்று 100கி.மீ ஒரு ரயிலும் 100 கி.மீட்டரில் இயங்கும் மற்றொரு ரயில் என இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்றி எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படலாம்.

நன்மைகள்:

1. படிபடியாக ரயிலின்  ரயிலின் வேகம் அதிகரித்து பயணநேரம் குறைக்கப்பட்டு காலஅட்டவணையிலும் மாற்றம் வரும்

2. முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும்

3. அடுத்த பக்கத்து ஊர்களுக்கு இந்த ரயில்களை நீட்டிப்பு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் கூடுதல் ஊர்களுக்கு ரயில் இணைப்பு கிடைக்கும்

4. ரயில்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

5. இந்தியா முழுவதும் ஒரே ஒழுங்காக 200 கி.மீக்கு மேல் உள்ள அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது. (இதற்கு முன்பு ஒரு சில ரயில்வே  மண்டலங்களில் அதிக அளவில் பயணிகள் ரயில்களும் ஒருசில மண்டலங்களில் மிககுறைந்த அளவு பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.)

6. ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும்

7. ரயில்களின் பராமரிப்புகளில் மாற்றம் மற்றும் புதிய எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றி இயக்க வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.