சீன ஆப்ஸ்களுக்கு இந்தியாவில் தடை: சீனா கவலை

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2020 19:54

பெய்ஜிங்

இந்தியாவில் சில கம்பெனிகள் தயாரித்து புழக்கத்தில் உள்ள 59 அரசுகளுக்கு திங்களன்று இரவு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன ஆப்ஸ் களுக்கு இந்திய அரசு தடை விதித்திருப்பது குறித்து சீன வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜாவோ லிஜியான் இன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது ஒருவர் சீன ஆப்ஸ்களுக்கு இந்தியாவில் தடை விதித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பினார். அவருக்கு

ஜாவோ லிஜியான் பதிலளிக்கும்போது அவர் கூறியது:

சீன வர்த்தக நிறுவனங்கள் வெளிநாடுகளில் இயங்கும் பொழுது சர்வதேச விதிகள் மற்றும் அந்த நாட்டு சட்டங்கள் விதிகள் ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று சீன அரசு எப்பொழுதும் சீன வர்த்தக நிறுவனங்களுக்கு வலியுறுத்தி தெரிவித்து வருகிறது.

வெளிநாட்டு அரசாங்கங்கள் உடன் வர்த்தகரீதியான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்திய அரசை பொருத்தமட்டில் நான் கூற வேண்டும் விரும்பும் விஷயம் ஒன்று தான் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக சீன முதலீட்டாளர்களுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது என்பதை இந்திய அரசு மறந்துவிடக்கூடாது. இந்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக உள்ளது என்று ஜாவோ லிஜியான்கூறினார்.

59 சீன ஆப்ஸ் களுக்கு இந்தியாவின் ஐடி சட்டம் 69 ஏ பெரிவின்க்கி இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு வகுக்கப்பட்ட விதியின்கீழ் இந்திய அரசு இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விதியின் கீழ் இடைக்கால தடை விதிக்கப்பட்ட ஆப்ஸ் அமைப்புகளுக்கு அவற்றை ஏன் தடை செய்யக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி இந்திய அரசு கோரியுள்ளது. இடைக்கால தடை விதிக்கப்பட்ட சீன ஆப்ஸ்கள் இந்தியாவில் அவற்றை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டு பல அறிக்கைகள் செய்திகள் வெளியாகி உள்ளன அதனால் இந்தியாவின் பாதுகாப்பு இந்தியர்களின் உரிமைகள் ஆகியவை மீறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன இந்தியாவின் இறையாண்மை பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு ஆகியவை மீறப்படும் இந்த ஆப்ஸ்கள் காரணமாக செயல்படுவதாகவும் குறை கூறப்பட்டுள்ளது அதனால் இவற்றை ஏன் தடை செய்யக்கூடாது என்று இந்திய அரசுக்கு விளக்கம் தரும் காரணங்களை தெரிவிக்கும்படி இந்திய அரசு கோரியுள்ளது இந்திய அரசின் கோரிக்கைப்படி இந்திய அரசுக்கு விளக்கம் தர தயாராக இருப்பதாக டிக் டாக் .கேம்ஸ்கேனர் .யூசி பிரௌசர். கிளப் ஃபேக்டரி .ஆகிய ஆப்ஸ்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.