கராச்சி பங்கு விற்பனை நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2020 19:52

இஸ்லாமாபாத்

கராச்சியில் உள்ள ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா பின்னணியில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செவ்வாயன்று குற்றம்சாட்டினார்.

திங்களன்று காலை கராச்சி பங்கு விற்பனை நிலையம் மீது பலுச்சிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு தாக்குதல் நடத்தியதாக உரிமை கோரியது ஆனால் இப்பொழுது இந்தியா அந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார்.

கார் ஒன்றில் வந்து இறங்கிய 4 பேர் கையெறி குண்டுகளை பேசியதோடு துப்பாக்கியால் சரமாரியாக ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீது சுட்டார்கள் இந்த தாக்குதலின்போது ஷாக்கிங் சேஞ்சிங் காவலர்கள் இருவரும் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் எதிர் தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று பேசும்பொழுது பாகிஸ்தான் பிரதமர் கராச்சியில் நடந்த தாக்குதலின் பின்னணியாக இந்தியா உள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று இம்ரான் கான் கூறினார் அதுமட்டுமல்ல கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தான் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா நடத்தக் கூடும் என்றும் நான் எச்சரித்து வந்து உள்ளேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் என்று இம்ரான்கான் தெரிவித்தார்.