ஹாங்காங்கிற்கான ராணுவ சாதன ஏற்றுமதி இன்று முதல் ரத்து அமெரிக்கா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2020 14:45

ஹாங்காங்

ஹாங்காங்கிற்கான ராணுவ சாதன ஏற்றுமதியை அமெரிக்கா இன்று முதல் ரத்துச் செயகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

ஹாங்காங் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது. ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் சீனா கொண்டு வந்துள்ளது. ராணுவ சாதனங்களை இனி ஹாங்காங்குக்கு வழங்குவது சீனாவுக்கு வழங்குவதாகும், அதனால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என்றார் மைக் பாம்பியோ.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் இத்தகவலைத் தெரிவித்தார்.

ஹாங்காங் இரட்டைப் பயன்பாடு உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா இன்று முதல் தடை செய்கிறது.

சீனா ஹாங்காங்கை ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற வரையறைக்குள் கொண்டு வந்தால், அமெரிக்காவும் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சதி வேலைகளால் உலக நாடுகளுக்கு கேடு விளைவித்து வரும் சீனா இப்போது தனித்து விடப்பட்டுள்ளது.

இந்திய அரசும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளது.

பல சீன மொபைல் செயலிகளை தடை செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும் தனது பாதுகாப்பு உபகரணங்களுக்கான தொழில்நுட்ப பகிர்வை தடை செய்துள்ளது.