இந்திய பங்குச்சந்தை இன்று வீழ்ச்சியுடன் நிறைவு

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 19:04

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இ்ன்று சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 209 புள்ளிகள், நிப்டி 70 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி, ஆசிய சந்தைகள் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவைச் சந்தித்து வருகின்றன.

இன்று மாலை வர்த்தகம் முடியும் பொழுது மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 209.75 புள்ளிகள் சரிந்து 34,961.52 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதைபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 70.60 புள்ளிகள் சரிந்து 10,312.40 புள்ளிகள் நிலைபெற்றது.

ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பஜாஜ் நிதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  5 சதவீதம்  வரை சரிந்தது. மறுபக்கம் ஐ.டி.சி. நிறுவனங்களின் பங்குகள் இன்று 4 சதவீதம் உயர்ந்தது.