தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:33

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 3,949 பேருக்கு மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு மிகவும் கவனமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

சென்னையில் இதுவரை 55,969 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,681 - பேர்

தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 3,949 பேருக்கு மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது  (ஆண்கள் - 53,124 பெண்கள் - 33,079, மூன்றாம் பாலினத்தவர் - 21 பேர்)

கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 30,005 பேருக்கு செய்யப்பட்டுள்ளது -

தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,331 பேர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,212 - பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 47,749-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 10,86,569 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 55.37% பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம் (29.06.2020) மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளது.