ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து ஜிலானி வெளியேறினார்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 17:05

ஸ்ரீநகர்

ஹூரியத் மாநாடு அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அதன் தலைவர் சையது அலி ஜிலானி இன்று தெரிவித்தார்.

இன்று உள்ள சூழ்நிலை காரணமாக ஹூரியத் மாநாடு கட்சியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக ஜிலானி தெரிவித்தார் தன்னுடைய முடிவை கூட்டமைப்பில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் தான் விரிவான கடிதம் மூலம் தெரிவித்து விட்டதாகவும் ஜிலானி கூறினார்.

கிலானிக்கு 90 வயதாகிறது அவர் 2013ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அவர் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பில் முதலில் செயல்பட்டு வந்தார் பின்னர் அதிலிருந்து விலகி தெஹ்ரிக் இ ஹூரியத் என்ற அமைப்பை துவக்கினார். ஹூரியத் அமைப்பின் பாரூக் பிரிவில் இருந்தும் அவர் விலகி இருந்தார். தீவிர நடவடிக்கைகள் காரணமாக அவர் ஜம்மு-காஷ்மீர் அரசியலில் பெயர் பெற்றார்.

கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு உடல்நலம் இல்லை. அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரையும் அவரை காண அரசு அனுமதிப்பதில்லை.

ஹூரியத் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள விரிசலே அவர் அந்த அமைப்பில் இருந்து விலகுவதற்கு காரணம் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

தன்னுடைய முடிவுக்கு ஜிலானி எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.