சாத்தான்குளம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை: முதலமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2020 16:29

சேலம்

சாத்தான்குளம் சிறு வியாபாரிகளான தந்தை, ஜெயராஜ மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கைது, காவல் நிலைய விசாரணைக்குப் பின்  மரணம் அடைந்த்து  குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக முதல்வர் எடப்படி கே பழனிசாமி ஞாயிறன்று தெரிவித்தார்.

சாத்தான்குளம் சிறு வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மாஜுஸ்திரேட் விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுப்படி மாஜிஸ்திரேட் விசாரணையும் துவங்கி விட்டது.

எனவே சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ள விஷயத்தை மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிப்போம். ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி பெற்று, இருவர் மரணம் பற்றிய விசாரணை  சி.பி.ஐ., பொறுப்புக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.   

மாஜிஸ்திரேட் விசாரணை

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணங்கள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியது சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதன்படி, மாஸ்திரேட் விசாரணை துவங்கியது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் விசாரித்து, போலீஸ் ஸ்டேசனில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

இதற்கிடையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
4 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக வடசேரி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக இருந்த பெர்னார்டு சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் செய்தி

சேலத்தில் இன்று நிருபர்களை முதல்வர் சந்தித்தார். முதல்வர் பழனிசாமி அவர்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தப்படும். ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி பெற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு வழக்கு மாற்றப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.