சீன பொருள்கள் மீது இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் உயர்வு

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2020 14:17

புதுடெல்லி

இந்திய சீன எல்லையில் இந்திய வீரர்களை கொன்று குவித்த சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான இறக்குமதி தீர்வை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. சூரிய மின்சாரத்துறையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது இறக்குமதி தீர்வை 10% உயர்த்தப்பட உள்ளது.

வரி தவிர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு வேறு உத்திகளை பயன்படுத்தவும் இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்திய சீன எல்லையில் இந்திய வீரர்களை கொன்று குவித்த சீன ராணுவத்துக்கு ம் சீன அரசுக்கும் எதிரான உணர்வு நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை இந்தியா நம்பி இருக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள் இந்தியாவின் பல பகுதிகளில் சீன பொருட்களுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இந்திய அரசு தன்னுடைய தேவைகளுக்கு சீன பொருள்களை நம்பி இருக்கக் கூடாது என்று கருதுகிறது இந்த அடிப்படையில் விரிவன பிற துறைகளுடன் இணைந்து வலுத்து வருகிறது.

சென்ற ஆண்டு சீனாவிலிருந்து 7000 கோடி டாலர் மதிப்பு உள்ள பொருள்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன அதே காலத்தில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு 2,000 கோடி டாலராகும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக துறையில் இந்தியாவுக்கு துண்டு விழுந்த தொகையின் மதிப்பு 5000 கோடி டாலர் ஆகும்.

சூரிய மின்சார உற்பத்தித் துறையில் இந்தியா தனக்குத் தேவையான சூரிய மின்சார செல்கள் மற்றும் சூரிய மின்சார மாடியூல். சூரிய மின்சார இன்வெர்டர் ஆகியவற்றில் சீனாவிடமிருந்து தான் 80 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறது.

இறக்குமதி தீர்வை உயர்வு

தற்பொழுது இந்த பொருள்களுக்கு இந்திய அரசு விதிக்கும் சுங்கத்துறை 15 சதவீதம்தான் இந்த சுங்கத்தீர்வை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மரபுசாரா மின் உற்பத்தித் துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது அது தவிர 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 25 சதவீத சுங்க தீர்வை 40 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது

சோலார் செல்கள் மீது விதிக்கப்படும் 15 சதவீத சுங்க தீர்வை 25 சதவீதமாக 2002 22ம் ஆண்டு உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. சோலார் இன்வெர்டர் கள் மீது விதிக்கப்படும் சுங்கத்தீர்வை 20 சதவீதமாக உயர்த்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மின் துறை இணை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

சூரிய மின்சார உற்பத்தித் துறையில் அவசியம் என்று ஆர்கே சிங் குறிப்பிட்டார்.

இறக்குமதிக்கு முன்அனுமதி

இவை தவிர இறக்குமதி தொடர்பாக கடுமையான கட்டுப்பாட்டு விதிகளையும் நடைமுறைகளையும் இந்திய அரசு அமல் செய்ய வேண்டும் என்று மரபுசாரா மின் உற்பத்தி துறை குறிப்பிட்டுள்ளது இதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மரபுசாரா மின் உற்பத்தி துறை சாதனத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கக்கூடாது.

இறக்குமதி செய்ய விரும்புகிற பொருள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத பட்சத்தில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கலாம் இந்தியாவின் அண்டை நாடுகளில் சில எதிரி நாடுகளாக உள்ளன சில நாடுகள் எதிரி நாடுகளாக மாறும் நிலையில் உள்ளன எனவே இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி தவிர்க்க உதவுவதற்காக அண்டை நாடுகளில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதுகுறித்து இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் இறக்குமதிக்கான நிதி பரிமாற்ற நடவடிக்கைகள் வங்கிகள் மூலம் துவக்கப்பட வேண்டும் இந்திய அரசின் அனுமதி கடிதம் பெறாமல் இறக்குமதிக்கான எந்த நடவடிக்கைகளையும் துவக்க கூடாது என்று கண்டிப்பாக இந்திய அரசு கருதுகிறது.

இது தவிர வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்துறை சாதனங்களில் மால்வேர் அல்லது தீங்கு விளைவிக்கும் மென்சாதனங்கள்.       ( சாப்ட்வேர்) பொருத்தப் படலாம் . அந்த தீங்கு விளைவிக்கும் மென்சாதனங்களை வெளிநாட்டில் இருந்தபடி இயக்கி அந்தத் துறையின் பணியை நாசப் படுத்தலாம் என்று செய்திகள் வெளியாகின்றன.

கடும் சோதனைகள்

 வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களில் ட்ரோஜன் ஹார்ஸ் என்று கூறப்படும் உள்ளிருந்தவாரே நாசஞ் செய்யும் கருவிகளை பொருத்தி அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது. 

எனவே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்துறை கருவிகளை பொருத்த மட்டில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதே போல வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கடுமையான ஆய்வு சான்றிதழ்களை தாக்கல் செய்யும்படி வலியுறுத்த வேண்டும். அது தவிர தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களும் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்துகிறது. 

இத்தகைய கட்டுப்பாடுகள் சூரிய மின்சாரம் உற்பத்தி தொடர்பான துறையில் மட்டும் மேற்கொள்வதால் எந்த பயனும் இல்லை என்று கருதப்படுகிறது. 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாற்காலி வகைகள், ஏர் கம்ப்ரசர், ஏர் கண்டிஷனர்கள், மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் ஆகியவையும் இதேபோன்ற இறக்குமதி முன் ஒப்புதல் நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் பாகங்கள் அதேபோல ஆய்வு சோதனை மற்றும் தரக்கட்டுப்பாட்டு சாதனா  சான்றிதழுடன் மட்டும் தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக துறையும் கருதுகிறது.

இந்தியா இறக்குமதி செய்யும் இந்த பொருள்களுக்கான இறக்குமதி தீர்வையும் உயர்த்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இலாகாக்கள் கூறியுள்ளனர். 

இறக்குமதி தீர்வை எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து தற்பொழுது ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.