டிவி பேட்டி- ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டிருக்கேன்! அம்மன்’ பவித்ரா அரவிந்த் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள் : 27 ஜூன் 2020

  “சாமியோட  பொண்ணு மாதிரியான ஒரு தெய்வீக  கேரக்டர்ல  நடிக்கிறேன்.    இதுவரை  சீரியல்ல  இப்படிப்பட்ட  கேரக்டர்  யாருக்குமே  கிடைச்சிருக்காதுன்னு  நினைக்கிறேன்.  அந்த  வகையிலே  நான்  ரொம்ப  ஆசீர்வதிக்கப்பட்டிருக்கேன்!”  என மிகவும்  நெகிழ்ந்து  சொன்னார்  பவித்ரா  அரவிந்த்.   ‘அம்மன்’  ( கலர்ஸ்  தமிழ்  )   சீரியலில்  ‘சக்தி’  லீடிங்  கேரக்டரில்  நடித்து  வருபவர்  அவர்தான்.  

 

அவருடைய  பேட்டி –

*   ’சக்தி’  கேரக்டரை பத்தி ……..?

 சக்தி  ஒரு சாதாரண  குடும்ப பொண்ணுதான்.  சின்ன  வயசிலேயே அப்பா – அம்மா  இறந்திருப்பாங்க.  அவளுக்கு ரெண்டு அக்கா இருக்காங்க.  அவங்களோட  கட்டுப்பாட்டுலதான் அவ வளருவா.  அதனால சக்திக்கு வெளியுலகம் தெரியாது.  ஆனா, எல்லாரை  மாதிரி வெளியே போகணும், சுத்தணும்னு அவளுக்கும் ஆசை இருக்கும்.  என்னன்னா, அவளுக்கு ஒரு தெய்வ  சக்தி இருக்கும்.  அதாவது,  அம்மன்  அருள்  அவளுக்கு  இருக்கும். ஊர் பேரு, மாரியூர்.  அம்மன் சக்தி இருக்கிறதால, அந்த ஊர்ல அவளை ஒரு ‘சாமி’யாகவே  பார்ப்பாங்க.  ஏதாவது தப்பு நடக்க போகுதுன்னா, அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிடும்.   ஏதாச்சும்  கடை தொறக்கணும், ஓட்டல் தொறக்கணும்னா முதல்ல  சக்திகிட்ட போய் தொழில் நல்லபடியா நடக்குமான்னு கேட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு போவாங்க. அந்த சமயத்திலே அவகிட்ட காசு கொடுத்திட்டு போவாங்க.  அவளை  வச்சு  அவளோட ரெண்டு அக்காக்களும் சம்பாதிப்பாங்க.  அவ வெளியே தனியா நடந்து போகிறதை யாராவது பார்த்துட்டா,  ரொம்ப ஆச்சரியப்படுவாங்க.  அப்படி வெளியே போனா,  தங்களோட கையை விட்டு போயிடுவாளோன்னு  நினைச்சு அவளை அடக்கி  வளர்ப்பாங்க.


*   இந்த கேரக்டர்ல  நடிக்க  ஒத்துக்கிட்டதுக்கு  எது  தூண்டுகோலா  இருந்துச்சு?

நான் பெங்களூருல  இருந்தேன்.  அப்போ இந்த சீரியலுக்காக  ஆடிஷனுக்கு வர சொல்லி  என்னை கூப்பிட்டாங்க.  சென்னைக்கு வந்து ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அந்த சமயத்திலேதான் இது ஒரு டிவைன் கேரக்டர்ன்னு தெரியவந்துச்சு.  கேரக்டரை பத்தி எனக்கு விளக்கின போது அது என்னை ரொம்பவே  இம்பிரஸ்  பண்ணுச்சு. சினிமாவிலே ரம்யா கிருஷ்ணன் மேம், மீனா மேம்  இப்படிப்பட்ட தெய்வீக கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.  ஆனா, சீரியல்ல  அப்படி யாருக்குமே கிடைக்கலே.  எனக்கு முன்னாடி இந்த கேரக்டருக்காக நிறைய பேரு ஆடிஷன்ல கலந்திருக்காங்க.  அப்படி  பார்த்து பார்த்து  கடைசியா  என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க.  வேற மாதிரியான கேரக்டர்  வாழ்க்கையிலே வந்து போகும்.  ஆனா, இப்படிப்பட்ட தெய்வீக கேரக்டர் வாழ்நாள்ல  ஒரு தடவைதான் வரும்.  அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு  எனக்கு இந்த வயசிலேயே  கிடைச்சிருக்கு.  அதை நான் சரியான முறையிலே பயன்படுத்திக்கணும். கதைப்படி,  ஊர்மக்களெல்லாரும் என்னை ஒரு ’சாமி’யாகவே  பார்ப்பாங்க.  நான் ’சாமி’யோட பொண்ணு.  இதுவே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.  இந்த விஷயம்தான் எனக்கு தூண்டுகோலா அமைஞ்சிச்சு.

*   பீலிங்  எப்படி  இருக்கு?

ஊர்மக்கள்  என்கிட்ட அருள்வாக்கு கேப்பாங்க.  அது ரொம்ப சுப்பீரியர்  பீலிங்.  வேற  கேரக்டர்ல  நடிக்கும்  போது அப்படிப்பட்ட பீலிங் கிடைக்காது.  அம்மனுக்கு நான் பூஜை பண்ணுவேன்.  கோயில்ல பூசாரிக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் கிடைக்கும்.  எனக்கு இதிலே கிடைச்சிருக்கு.  அவ்வளவா  டான்சே வராத எனக்கு, ‘அம்மன்’  டான்ஸ் ஆட வச்சிருக்காங்க.  அது ஒரு பியூட்டிபுல் பீலிங்.  அதிலே ஆடும் போது ரொம்ப எனர்ஜடிக்கா  இருந்துச்சு- எனக்கு மட்டுமில்லே,  அதிலே பங்கெடுத்த எல்லாருக்குமே!

*  ’அம்மன்’தான்  உங்களுக்கு முதல்  சீரியலா?

தமிழ்ல  இதுதான் முதல் சீரியல்.   ஆனா, ஏற்கனவே  ‘மாங்கல்யம்  தந்துனானே’ கன்னட சீரியல்ல  நடிச்சிருக்கேன்.  அதிலே  வில்லி கேரக்டர்ல  நடிச்சேன்.  அதுக்கும்  முன்னாலே  ……..  நாலாவது படிக்கும் போது ஒரு கன்னட சீரியல்ல ஒரே ஒரு எபிசோடுல சும்மா  வந்துட்டு போற மாதிரி நடிச்சிருக்கேன்.  

*   உங்களை  பத்தி ……..

எனக்கு  நேட்டிவ்,  சிக்மகளூர்  (கர்னாடக  மாநிலம்).  ஆனா, நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் பெங்களூருலதான்.  அப்பா  அரவிந்த் பெங்களூருல பிசினஸ் பண்றாரு.  அம்மா  லதா  ஹவுஸ்ஒய்ப்.  நான்  ஒரே  பொண்ணு. என்னோட  எஜுக்கேஷனல்  குவாலிக்கேஷன்,  பிஎஸ்சி                                                  ( பையோடெக்னாலஜி ).  சின்ன வயசிலே நடிக்கணும்ங்கிற எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததில்லே.  காலேஜிலே  கடைசி  வருஷம் படிக்கும் போதுதான் சும்மா ஜாலியா  என் பிரண்ட்ஸ்கிட்ட சில பேர் மாதிரி இமிடேட் பண்ணி நடிச்சு காட்டுவேன்.  அப்போ அவங்கள்லாம் நீ பேசாம  நடிகை ஆயிடலாம்னு  சொல்வாங்க.  அதே  மாதிரி   நான் காலேஜிலே  கடைசி வருஷம் படிக்கும்போது ‘மாங்கல்யம்  தந்துனானே’ கன்னட சீரியல்ல  நடிக்கிறதுக்கு  வாய்ப்பு  வந்துச்சு.  அது  நான் எதிர்பார்க்காதது. என்னோட  அதிர்ஷ்டம்னுதான்  சொல்லணும்.

*  பியூச்சர்  பிளான்ஸ்?

’அம்மன்’  மாதிரி  மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ற மாதிரி நல்ல புராஜக்டுகள் வந்தா, கண்டிப்பா நடிப்பேன்.  அப்புறம் சினிமாவிலே  நடிக்கணும்.  லீடிங் கேரக்டர்தான் பண்ணணும்ங்கிறது இல்லே.  நான் அஞ்சு  நிமிஷம்  வந்தாலும்  மக்களுக்கு  பிரயோஜனமா இருக்கணும்.  இந்த  மாதிரியான ஒரு மெசேஜ் சொல்லிட்டு போயிருக்காங்கன்னு  என் கேரக்டர் இருந்தாலே போதும்.