கொரானாவுக்கு வேட்டு: வழி காட்டும் கண்ணகி நகர், தாராவி

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2020

மகாராஷ்டிராவில் நாளோரு தாவல், பொழுதொரு உயர்வுமாய் கொரோனா தொற்று  அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் மரணத்தை தழுவியுள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்ராவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி மகாராடிராவில் தாராவில் உள்ளது.. இங்கு கொரோனா பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்துமென பெரும் அரசும் அதிகாரிகளும் மும்பை மக்களும் அச்சத்திலிருந்தனர். ஆனால்  கொரோனா அங்கு  வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தபட்டுள்ளது.

மும்பையின் மையப் பகுதியான மதுங்கா, மஹிமா, பந்தரா, சயான் ஆகிய பகுதிகளின் மத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் தாராவி பரவி கிடக்கிறது.  அங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பிழைப்புக்காக மும்பை சென்ற தமிழர்கள்தான் அங்கு அதிகம் .

 கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினி நடித்த காலா, ஆஸ்கார் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய திரைப்படங்கள் தாராவியைத்தான் கதைக்களமாக கொண்டவை .

தாராவி பல்வேறு நோய்த்தொற்றுகளை சந்தித்திருந்தாலும் மருந்தே கண்டுப்பிடிக்கப்படாத கொரோனா தாராவியில் பரவி பல உயிரிழயப்புகளை ஏற்படுத்தும் என்று எல்லோரும் அஞ்சினர். காரணம் தாராவியில் மககள் நெருக்கம் அதிகம். மும்பை மாநகராட்சியும் இப்பகுதியில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தப்போகிறோம் என்று பெரும் கவலையில் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஆனால், வைரஸைத் துரத்தியடிப்போம் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு இரவு பகல் பாராமல் களப்பணி ஆற்றினர். அதன் விளைவாக தாராவிலிருந்து கொரோனா வைரஸ் துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறது. இதை மத்திய அரசு மட்டுமல்லமால் பல்வேறு தரப்பினரும் மும்பை மாநகராட்சியை பாராட்டி வருகின்றனர்.

தாராவியில் கொரோனாத் தொற்று பரவல் மே மாதத்தில் 4.3 சதவிகிதமாக இருந்தது. இப்போது 1,2 சதவிகிதமாக குறைந்துள்ளது.  அதோடு மும்பையின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தாராவில் கொரோனா மரணங்கள் மிகவும் குறைவு.

இவ்வளவுக்கும் அங்கு வசிப்போர்களில் 80 சதவிகிதத்தினர் பொதுக்கழிப்பறையைதான் பயன்படுத்துக்கின்றனர். மேலும் பத்துக்கு பத்துக்கு என்ற அளவிலுள்ள அறையில் எட்டு முதல் பத்து பேர் வசிக்கிறார்கள். அங்கு தனி மனித இடைவெளி என்பது சாத்தியமே இல்லை. அப்படியிருக்கையில் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

இது எப்படி சாத்தியமானது?

"தாராவிக்கு கொரோனா வரட்டும் என்று காத்திருக்காமல் வைரசைத் துரத்தியடிக்கும் உத்தியை கையாண்டோம். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் வைரசைத் துரத்தியடிக்கும் செயல்தான் சிறந்ததாக இருக்கும் எண்ணி ஒவ்வொரு வீட்டில் வசிக்கும் அனைவருக்கம் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் சோதனையை நடத்தினோம்.. கொரோனா அறிகுறி இருப்போரை அருகிலுள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைத்தோம். அங்கு நிறைய ஸ்போர்ட் கிளப்கள் உள்ளன. அவைகளை தனிமைப்படுத்தும் பகுதிகளாக மாற்றினோம். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களை அமைத்தோம். இப்படி ஒவ்வொன்றையும் திட்டம் வகுத்து செயல்பட்டதால் கைமேல் பலன் கிடைத்தது.

”ரம்ஜான் நோன்பு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு உரிய நேரத்தில் பழங்கள் மற்றும் உணவும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொண்டோம். இந்த நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கை பெற்றோம். அதன் வாயிலாக மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினர். அதனால்தான் தாராவியில் இருந்து  எங்களால் கொரோனா வைரசைத் துரத்தியடிக்க முடிந்தது" என்கின்றார் மும்பை மாநகராட்சி அதிகாரிகள்.

சென்னையில் ஒரு சாதனை

தாராவியைப் போலவே சென்னை அருகில் கண்ணகி நகர் இருக்கிறது.

சென்னையில் தினந்தோறும்  வெளியிடப்படும் கொரோனா  அறிக்கையில், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில் கண்ணகி நகரில் மட்டும் கொரோனா பரவலைக் வெகுவாகக் கட்டுப்படுத்தி இருப்பது நிம்மதி அளிக்கும் விஷயமாகும்.  கண்ணகி நகர் அமைதித் தீவாக அமைந்துள்ளது.

சென்னையில் கூவம் மற்றும் அடையாறு கரையோரங்களில் வசித்த பல்லாயிரக்கணக்கானோரை வாழ்விடங்களிலிருந்து அகற்றி சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் அரசு குடியமர்த்தியது. இதில் கண்ணகி நகரில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு சமூக இடைவெளி காண்பது அரிது. அதனால் சென்னையில் கொரோனா பரவியபோது கண்ணகி நகர் மற்றொரு சீனத்தின் வு கான் நகராக மாறும் என்று அஞ்சினர்.  ஆனால் அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக கண்ணகி நகரில் கொரோனா ஒடுக்கப்பட்டுள்ளது.  

கண்ணகி நகரில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல்முறையாக கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு கொரோனா பரவத் தொடங்கியது. உடனே அரசு தொற்றாளர்களை கண்டுபிடித்து அவரின் குடும்பத்தினரையும் அவர்களோடு தொடர்பில் இருந்த ஆயிரக்கணக்கனோரையும் தனிமைப்படுத்தினார்கள்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டிய உணவு மற்றும் அத்தியாவசிய்ப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டுபோய் கொடுத்ததன் பலனாக இப்போது கண்ணகி நகரில் கொரோனாவை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.

எங்கெல்லாம் கடும் உழைப்பு, திட்டமிடல், நுணுக்கமான விவரங்கள் கூட விடுபடாத செயலாக்கம் உள்ளதோ அங்கெல்லாம் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருப்பார் என்பது தமிழக நிர்வாக நடைமுறைகள அறிந்த நிபுணர்களின் மதிப்பீடு.

சுகாதாரத்துறையிலிருந்து வேற்றுத்துறைக்கு சென்ற  ராதா கிருஷ்ணன் சுகாதாரத்துறைக்கு திரும்ப விரும்பி அழைக்கப்பட்டார்.  அவரிடம் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டன.

ராதாகிருஷ்ணன் பேட்டி

கண்ணகி நகரில் கொரோனா கட்டுக்குள் வந்த்து எப்படி எப்படி?

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது.அனைத்து விவரங்களையும்நுணுக்கமாக விளக்கினார் " கண்ணகி நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதை கண்டறிந்தோம். அதன் விளைவாக அதை கட்டுப்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளும் தன்னார்வ அமைப்பாளர்களையும் பயன்படுத்திக்கொண்டோம். கொரோனாவால் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் அத்தியாவசிப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டுபோய் கொடுத்தோம். அது மட்டுமின்றி முகக்கவசம் அணிவது. அடிக்கடி கைக்கழுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்து இடைவிடாத பிரசாரமும் அங்கு நடந்தது. அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி கொடுத்தோம்.

வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய 150 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மையங்கள் அமைக்கப்பட்டன. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அரசு சொன்ன விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்தனர். இதனால் கொரோனா பரவல் வெகுவாக அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது." சொல்லப்போனால் சென்னையில் கண்ணகி நகர் முன்னுதாரணமாக பின்பற்றத் தக்க வெற்றி என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

முத்தமிழ் ஆவணமாக்குங்கள்

இந்த வகையில் கண்ணகி நகரும் மும்பை தராவியும் நகர்ப்புற சேரிப்பகுதிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது என்பதை விளக்கும் மாதிரி மையங்களாகக் கொள்ளலாம்.

தமிழக சுகாதாரத் துறை கண்ணகி நகர் முயற்சிகளை அறிவியல் ஆவணமாகத் தயாரிக்க வேண்டும். இயல்தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகிய மூன்று வடிவங்களிலும் ஆறிவியல் ஆவணமாக்க வேண்டும்.

அகில இந்திய அளவிலும் உலக சுகாதார ஸ்தாபனமும் பயன்படுத்த ஆங்கில மொழியிலும் இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப் பட வேண்டும்.கண்ணகி நகர் பெற்ற நிம்மதியை மற்ற பல நகர்கள் பெற உதவுவது தமிழக அரசின் கடமைகட்டுரையாளர்: பேட்டிக் கட்டுரை: குட்டிக் கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation