சேனல் நியூஸ் (25. 06. 2020)

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2020

 பக்தியால்  உள்ளம்  உருகும்!


 ‘உள்ளம்  உருகுதையா’  ஆன்மிக  நிகழ்ச்சி  வேந்தர்  டிவியில்  தினமும்  காலை 6.05  மணிக்கும்,   மாலை  6.05  மணிக்கும்  ஒளிபரப்பாகிறது.

   பல்வேறு  கோயில்களில் நடைபெறும் அபிஷேகங்கள்,  தெய்வீக  திருமணங்கள்  ஆகியவை  பக்தி கமழும் பாடல்களின் பின்னணியில் ஒளிபரப்பாகின்றன.   ஒவ்வொரு  நாளும்  அந்தந்த  நாளுக்கு  உகந்த தெய்வீக  பாடல்கள்  இடம்பெறுகின்றன.

  அபிஷேகம்,  அலங்காரம் என அழகு திருக்கோலத்தில்  இறைவனை தரிசனம் செய்யும் அனைவரின் உள்ளங்களும்  உருகும் என்பதில் சந்தேகமில்லை.


  எல்லாமே   சினிமாதான்!


    ‘சினிமேக்ஸ்’    நியூஸ்  7  தமிழில்  சனி  மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில்  மாலை  5.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  ஐஸ்வர்யா, நிவேதிதா, ஸ்ரீலேகா  ஆகிய  மூவரும்  தொகுத்து  வழங்குகின்றனர்.

           சினிமா  சார்ந்த பல விஷயங்களை பல்வேறு பகுதிகளில் உள்ளடக்கிய நிகழ்ச்சி இது.

’டாப்  7’  -   வாரம்  முழுவதும்  நடைபெற்ற  கோலிவுட்  விஷயங்களை  சொல்கிறது.      

’பிடிஎம்’ -  தமிழ்  சினிமா  அல்லாத பிற மொழி சினிமாவுலக விஷயங்களை சுவாரஸ்யமாக  சொல்கிறது.

‘சினிமா  போக்கஸ்’  -   வாரங்களில்  வெளியாகும் திரைப்படங்களை  நேர்மையான முறையில்  விமர்சிக்கிறது.

‘போஸ்டர்’ -  கோலிவுட்டில்  நடைபெற்ற  முக்கியமான இசை வெளியீட்டு விழாக்கள்,  பத்திரிகையாளர்  சந்திப்புகள்  போன்றவற்றை  நேயர்கள் கண்முன் கொண்டு வருகிறது.

‘ஓகே  டேக்’  -  சினிமாவில், சமூக வலைதளங்களில் பலராலும் பேசப்படும் ஒரு விஷயத்தை நையாண்டியாக காட்டுகிறது.

                     இவை  தவிர, நடிகர் – நடிகைகள்  மற்றும் சினிமா குழுவினரின் கலகலப்பான  பேட்டிகள் உட்பட  இன்னும் பல்வேறு பகுதிகளும் இடம்பெறுகின்றன. மக்கள்   உரிமை  போராட்டம்!

 சத்தியம்  டிவியில்  ‘உரிமை  குரல்’  சனிக்கிழமைகளில் மாலை 6.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  நிகழ்ச்சி  தொகுப்பு:-  ஸ்டெல்லா.

              வாராவாரம்  அந்தந்த வாரத்தில் நடந்த மக்கள் உரிமைக்கான அனைத்து போராட்டங்களையும் எடுத்து  காட்டுகிறது.  

               ’மாற்றம் ஒன்றே  மாறாதது’  என்பது போல, மாறும் மாற்றங்களுக்கிடையே  நாமும் வளமான மாற்றங்களுக்காக ஓடிக்கொண்டே  இருக்கிறோம்.  புரையோடும் பிரச்னைகளுக்கிடையே  மின்னலாக சீறி பாயும் நாட்களை நம் வாழ்வில் அன்றாடம் கடந்து கொண்டேதான் இருக்கிறோம். இப்படி  சமூக  பிரச்னைகள், சீரழிவுகள், சாதனை கொண்டாட்டங்கள், உண்மை சம்பவங்கள்,  மனக்குமுறல்கள் போன்றவற்றை  உரக்க  சொல்கிறது.


  பலவித   சினிமா   தகவல்கள்!

 ப்ரீத்தி  தொகுத்து வழங்க,   வேந்தர்  டிவியில்  சனி  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  மாலை  5  மணிக்கு  ‘சினிமா  360’  ஒளிபரப்பாகிறது.

          திரைப்படங்கள்  பற்றிய பலவிதமான தகவல்களை  உடனுக்குடன்  நேயர்களுக்கு  பதிவு செய்கிறது இந்த  நிகழ்ச்சி.  சினிமா  நட்சத்திரங்கள் பற்றிய பரபரப்பான செய்திகள், அவர்களின்  பேட்டிகள்,  புதிய படங்கள் பற்றிய சுவையான தகவல்கள்,  அன்றைய நாள் அறிவிக்கப்படும் சினிமா செய்திகள் போன்றவை  ஒன்றுதிரட்டி  நேயர்களுக்கு வழங்கப்படுகின்றன.


கூடுதல்   விருந்தினர்கள்!

புதிய  தலைமுறையில்  ‘நேர்படப்  பேசு’  விவாத நிகழ்ச்சி  திங்கள் முதல் சனி  வரை  இரவு  8  மணிக்கு ஒளிபரப்பாகிறது.  சேனலின் நிர்வாக  ஆசிரியர்   கார்த்திகை செல்வன்,  தம்பி  தமிழரசன், கார்த்திகேயன்  ஆகியோர்  நெறிப்படுத்துகின்றனர்.

    விவாத  நிகழ்ச்சி என்றாலே  ஒரே ஒரு விருந்தினரை  மட்டும் அழைத்து வந்து அவரது  கருத்துக்களை  மற்ற தமிழ்  ஊடகங்கள் வெளியிட்டுக்  கொண்டிருந்த  சமயத்தில்,  எதிரெதிர் சார்புகளை கொண்ட நான்கு அல்லது  அதற்கும்  அதிகமான  விருந்தினர்களை அழைத்து வந்து ஒரே நேரத்தில்  விவாதிப்பதற்கு  மேடையமைத்து கொடுத்த  முதல் நேரலை நிகழ்ச்சி  இதுதான்.  இதன் விவாத தலைப்புகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாகவும்,  சமூகத்துக்கு  பயன்படும் வகையிலும் இருக்கின்றன.  அன்றைக்கு  மக்கள்  மனதில் சமூகம் சார்ந்து என்ன கேள்வி உருவாகிறதோ,  அதுவே  தலைப்பாக  தேர்வு செய்யப்படுகிறது.  அனைத்து கட்சி  தலைவர்கள், அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக  ஆர்வலர்கள்,  பத்திரிகையாளர்கள்,  துறைசார்  வல்லுனர்கள்,  அரசியல்  பார்வையாளர்கள், சினிமா பிரபலங்கள் முதலானோர் விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.