டிவி நட்சத்திர பேட்டி - மத்தவங்க வாழ்க்கை மேம்பட உதவுங்க! அட்வைஸ் பண்ணுகிறார் மான்சி ஜோஷி

பதிவு செய்த நாள் : 23 ஜூன் 2020

*   மாடல் + நடிகை + டிரெய்ண்ட் டான்சர்   -   மான்சி  ஜோஷி.

*   ’குஷி,’ ‘மான்சி’  -  அவருடைய செல்லப்பெயர்கள்.       

 

*   “அன்புடன் குஷி”   சீரியலின்  ஹீரோயின், இந்த அம்மணிதான்.

*   தமிழில் இதுதான் அவருக்கு முதல் சீரியல்.

*   ஏற்கனவே “பாரு”  (ஜீ  கன்னடம்), “ராதா  ரமணா” (கலர்ஸ்  கன்னடம்) ஆகிய கன்னட சீரியல்களில் நடித்தவர்.

*  பெங்களூருகாரர்.

*   ஜனவரி 1,1994  -  அவருடைய  டேட் ஆப்  பெர்த்.

*   எக்கச்சக்கமாக மியூசிக்  ஆல்பங்களிலும், டிவிசி விளம்பரப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

*   மேலும், பல  டிக் டாக் வீடியோக்களிலும்  அவர் கணிசமாக நடித்து அவற்றின் மூலம் ஏராளமான ’பின்பற்றுபவர்’களை சம்பாதித்திருக்கிறார்.        

*   தாய்மொழி கன்னடம் தவிர ஆங்கிலமும் இந்தியும்  தெரிந்த  மொழிகள்.

*   கொரோனா   நோய் தொற்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த  நேரத்தில் …. ”அதை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்,  இறைவனை பிரார்த்திப்போம்!”  என்று  வாய்ஸ்  கொடுக்கிறார்.

*   தோசை  மீது  அவருக்கு அளவு அடந்த  பிரியம்.  “ தோசைக்காகவும், தென்னிந்திய ஆடைகளுக்காகவும் நான் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன்!” என்கிறார்.

     *   அழகு, அன்பு  இரண்டும் அவரிடமுள்ள பாசிட்டிவ்கள்.

     *    ஒரு  நல்ல மனுஷியாக இருக்கவேண்டும் என்பது அவருடைய கொள்கை.

      *   பியூர் அசைவர்.

      *   பிறரிடம்  மிகுந்த அக்கறை கொள்பவர்.

      *   ஜிம்முக்கு போவதை விடமாட்டார்.  அதே போல், ஜாக்கிங்கையும் மிஸ் பண்ணமாட்டார்.

       *   நீண்ட தூரம் டிரைவ் பண்ணுவது அவருடைய ஹாபி.

       *   இசையில்  எல்லா  வகைகளையும்,  லேட்டஸ்ட் சினிமா பாடல்களையும் ரசிப்பார்.

       *  ஏரோபிக்ஸ், புட்பால் ஆகியவை அவருக்கு பிடித்தமானவை.                        

       *   “ஒரு வைரம் போல் பிரகாசியுங்கள். உங்கள் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்து இவ்வுலகில் ஒரு பாசிட்டிவான விளைவை ஏற்படுத்துங்கள். பிறர்  வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதை விட மேலான கவுரவம் ஏதுமில்லை.”

            “வாழ்க்கை உங்களை எங்கே எடுத்து கொண்டு போகிறது என்பதை பொருட்படுத்த அவசியமில்லை.  நம்பிக்கையை இழக்காதீர்கள்!”

            இவையெல்லாம் மான்சியின் கோல்டன் வேர்ட்ஸ்.  


-இருளாண்டி