டிவி சிப்ஸ் (22.06.2020)

பதிவு செய்த நாள் : 22 ஜூன் 2020

வர்ற   சனிக்கிழமை  வனிதாவுக்கு   மூணாவது  கல்யாணம்!


 வனிதா  விஜயகுமாருக்கும் பீட்டர் பால்  என்பவருக்கும்  இம்மாதம் வருகிற  27ம் தேதி  சனிக்கிழமை   திருமணம்.   இது  வனிதாவுக்கு  மூன்றாவது திருமணமாகும்.  அவருடைய வீட்டிலேயே  மிகவும் எளிய முறையில்  அவர்களின் திருமணம் நடக்க போகிறது.  திருமண  அழைப்பிதழ்  இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.  சென்ற ஏப்ரல் 6ம் தேதி வனிதா சொந்தமாக ஒரு யூ டியூப்  சேனலை ஆரம்பித்தார்.  அதை ஆரம்பிப்பதற்கு பீட்டர் பால்  தனக்கு மிகவும் உதவியதாகவும், அவர் சினிமா துறையில் இருப்பதாகவும்  ஒரு இணையதளத்தில் வனிதா பதிவு செய்திருக்கிறார்.


        “சந்திரலேகா” படத்தில்  விஜய்  ஜோடியாக நடித்து   அறிமுகமானவர்,  வனிதா.  அதன்பின், ராஜ்கிரண் நடித்த “மாணிக்கம்” உட்பட சில படங்களில்  நடித்தார்.  2000ல்  நடிகர்  ஆகாஷுக்கும்  வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால்,   இருவரிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு  2005ல் சட்டரீதியாக  பிரிந்தனர். அவர்களுக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவிடமும் இருக்கின்றனர்.  அதன்பின்,   2007ல்   ஆந்திர தொழிலதிபர் ஆனந்த் ஜெய்ராஜனை  வனிதா  மணந்தார்.  ஆனால்,  இந்த திருமண பந்தமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை.  2010ல்  அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார் வனிதா.  இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.  இப்படி தன் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த வனிதா,  சினிமா  டான்ஸ்  மாஸ்டர் ராபர்ட்டுடன் சிறிது  காலம்   திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தியதாகவும்  சொல்லப்படுகிறது.

               தன் மகள்களுக்காக விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’  3வது  சீசனில் வனிதா  பங்கேற்றார்.   அவர் சினிமாவில் பிரபலமடைந்ததை காட்டிலும்,  இந்த ஷோ மூலம்  பிரபலம்  அடைந்தது  அதிகம் என்றே சொல்லலாம்.

           தன் மூன்றாவது திருமணம் குறித்து வனிதா தன் யூ டியூபில், “எனக்கு 27ம் தேதி  திருமணம்.  கொரோனா  லாக்டவுன்  சமயத்தில் ஏன் இந்த திருமணம் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம்.  சென்ற வருடம் டிசம்பரில்  பீட்டர்  பாலை ஒரு டைரக்டராக சந்தித்தேன்.  ஹாலிவுட், பாலிவுட் உட்பட என்னுடைய  தமிழ் படங்களிலும் அவர் பணியாற்றிருக்கிறார். ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பு  அவர் தன் காதலை என்னிடம் சொன்னார்.  என் மகளும் அதை ஏற்றுக்கொள்ளும்படி என்னிடம் சொன்னாள்.  ஜூன் 27ஐ  திருமண தேதியாக நான்  தேர்ந்தெடுத்ததற்கு காரணம்  -  நான் எது செய்வதாக இருந்தாலும், என் அம்மாவிடம்தான்               ( மறைந்த நடிகை  மஞ்சுளா )  கேட்பது வழக்கம். அப்படி என் அம்மாவிடம் ஏதாவது சொல்லுங்கள் என்று நினைத்தபடி இருந்தேன்.  ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு என் மொபைலை  எடுத்து பார்த்த போது ’ஜூன் 27’ என்ற தேதி மட்டும் கண்ணில் பட்டது. அப்போது நான் அழுதுவிட்டேன்.  அப்பொது அவரும்  (பீட்டர்  பால் )  என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று கேட்டார். 27ம் தேதி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சட்டென்று  சொன்னேன்.  அந்த தேதிதான் என் அம்மா – அப்பாவின் கல்யாண  நாள்.  அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷல் நாள். ஆகவே, அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்”  என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.  


 ஹீரோயின்  மாற  போறாங்களாம்!

 ’இது ஒரு காதல் கதை,’ ‘பெண்,’ ‘அஞ்சலி,’  ‘காதலிக்க  நேரமில்லை,’ ‘கோகுலத்தில்  சீதை,’  ‘கடமை கண்ணியம்  கட்டுப்பாடு,’ ‘சின்ன தம்பி’  ஆகிய சீரியல்களுக்கு பிறகு  இப்போது பிரஜின்  ‘அன்புடன் குஷி’யில் நடித்து வருகிறார்.


          ஒரு தமிழ் இளைஞன் மீது ஒரு வட இந்திய பெண் காதல் கொள்ளும் விதத்தில்  கதையின் போக்கு அமைந்திருக்கிறது.  தமிழ் இளைஞனாக பிரஜின் நடித்து வருகிறார்.  கொரோனா  லாக்டவுனுக்கு முன்பு வரை வட இந்திய கேரக்டரில் நடித்து வந்த ஹீரோயின்,  இனி  நடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.  எனவே ’அவருக்கு பதில் இவர்’  என்று டைட்டில் கார்டில்  வேறொருவர் இடம்பெற்று  சீரியலில் நடிக்க போவது நிச்சயம் என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


40  வயசு  ஆயிடுச்சு!  கல்யாணம்  ஆகலே!

  “நல்ல   விஷயங்களில்  நீங்கள் கவனம்  செலுத்தினால்,  ’நல்லவை’   சிறப்பு  பெறும்!” -  இப்படி  டுவிட்டரில்  டுவீட்  செய்திருக்கிறார் ‘தென்றல்’     ஸ்ருதிராஜ்.  


        ‘அழகு’ சீரியலில்   நடித்து கொண்டிருக்கும் அவர்,  கடந்த 25 ஆண்டுகளாக பீல்டில் இருந்து வருகிறார்.  சின்னத்திரையில் மட்டும் ‘அவர்கள்’ தொடங்கி  17  ஆண்டுகளாக  லீடிங்  கேரக்டர்களில்  நடித்து கொண்டிருக்கிறார்.   பெண் பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல  வரவேற்பு இருந்து வருகிறது.          

           40 வயதுடையவரான ஸ்ருதிராஜ்,   இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.  அவருடைய  பெற்றோருக்கு   இந்த கவலையே  பெரிய  கவலையாக இருக்கிறது.  சொல்லி சொல்லி பார்த்து  விட்டுவிட்டார்களாம்.

அவருக்கு  என்னைக்குத்தான் இந்த  நல்ல விஷயம்  நடக்குமோ?


இதெல்லாம்  ஒரு  பொழைப்பா?


 கிளிநொச்சியை  சேர்ந்த  இலங்கை கிளி லாஸ்லியா,  ஏற்கனவே ஒரு  மாடலாகவும்,  இலங்கையில் டிவி  நியூஸ் ரீடராகவும்  இருந்திருந்தாலும், ‘பிக் பாஸ்’ 3தான்  அவரை  நாலு பேருக்கு  தெரியவைத்தது.  இப்போது  பாருங்கள் ………..  சினிமாவிலேயே  நடிக்க  ஆரம்பித்துவிட்டார்.

         அண்மையில்,  ஒரு  சமூக  வலைதளத்தில்  அவருடைய  போட்டோ  தவறான எண்ணத்தில்  ‘மார்பிங்’ செய்யப்பட்டு  வெளியிடப்பட்டது.  அதை பார்த்த லாஸ்லியா உட்பட  எல்லோரும்  அதிர்ச்சியடைந்தனர்.  கொந்தளித்து போன லாஸ்லியா, தனது இன்ஸ்டாகிராமில்  செம ‘டோஸ்’ கொடுத்திருக்கிறார் -  “இதெல்லாம்  ஒரு   பிழைப்பா?”  என்று.

    

ஹஸ்பன்டுக்கு  ’ செல்ல’   டோஸ்!

    சன்   மியூசிக்   அஞ்சனா   ‘கயல்’ நடிகர் சந்திரனுக்கு  மனைவியான பிறகு  சிறிது காலம்  டிவி  பக்கமே வரவில்லை.   ஒரு குழந்தையை பெற்றெடுத்து  சில  மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் டிவி பக்கம் வந்து விட்டார்.  அவர் எப்போதும்  போட்டோஷூட் எடுத்து கொண்டு இன்ஸ்டாமில் பதிவு செய்து வைரலாகவே இருப்பது அவருடைய  வழக்கம்.  

      “மை  ஹஸ்பன்ட்  இஸ்  மை கண்கண்ட தெய்வம்” என்று  டுவிட்டரில் டுவீட் செய்திருந்தார் அஞ்சனா.  அதை ரீ – டுவீட் செய்த தன் காதல் கணவரை டாக்  செய்து “நான் இல்லாதப்ப  எப்படி  என் போனை எடுத்து யூஸ் பண்ணலாம்?  மவனே, நான் இதை உனக்கு திரும்ப  பண்ணுவேன்”  என்று  தமாஷாக  டுவீட்  செய்திருக்கிறார்.