பயோமெடிக்கல் இன்ஜினீயரிங்கில் வாய்ப்புகள் ஏராளம்!!

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2020

 கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  மார்ச் மாதத்தில் இந்தியாவில் சில நூறு பேருக்கு இருந்த  கொரோனா தொற்றுஊரடங்கை அலட்சியம் செய்து   மூன்றே மாதத்தில் மூன்று லட்சத்தைத் தொடும் நிலைக்கு மாறி இருக்கிறதுஇனி வரும் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் பலமடங்கு அதிகரிக்கலாம்கொரோனாவை இனி வரும் காலங்களில் தடுப்பூசியும்சிறப்புச் சிகிச்சையுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களும்ஆராய்ச்சியாளர்களும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

மருத்துவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்குத் தொழில்நுட்ப முறையில் உதவுபவர்கள் பயோமெடிக்கல் இன்ஜீனியர்கள்.  இவர்கள் மருத்துவத்துறைக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதும்மருத்துவத் துறைக்குத் தேவையான உபகரணங்களையும் வடிவமைப்பவர்கள்

அறுவைசிகிச்சையை ரோபோவே மேற்கொள்வதற்கு முக்கியமானவர்கள் பயோமெடிக்கல் இன்ஜினீயர்கள்மருத்துவத்துறையில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது


புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கும்வடிவமைப்பதற்கும்மேம்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ள துறையாக பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் விளங்குகிறது. கொரோனா தாக்கத்தால் இனி வரும் காலங்களிலும் பயோமெடிக்கல் இன்ஜினீயர்களின் தேவை அதிகரிக்கவே செய்யும்.  இத்தகைய தருணத்தில்   பயோமெடிக்கல் துறையில் நுழைபவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாகவே உள்ளனமருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஏராளமான விஷயங்கள் உள்ளனஇத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும்புதிய கருவிகளையும் வடிவமைத்து உலக அளவில் புகழ்பெறலாம்.

பொதுவாகமருத்துவத்துறைக்கும்பொறியியல் துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவது பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் என்றே சொல்லலாம்பயோமெடிக்கல் இன்ஜினீயர்கள் கிளினிக்கல் இன்ஜினீயர்ஸ் என்றும் அழைக்கப்படுவார்கள்மருத்துவத்துறையில் பொறியியல் வல்லுநராக வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் இந்த பிரிவைத்  தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.  

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவத்துறையில் கால் பதிக்க முடியாதவர்கள் பயோமெடிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறையில் பணி வாய்ப்பைப் பெறலாம்

மருத்துவர்களே தங்களுடைய இளநிலை மருத்துவப்படிப்புகு பின்புநிபுணத்துவம் பெற வேண்டும் என்ற வகையில் பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள் என்றால் இத்துறையின் பெருமையைத் தெரிந்துகொள்ளலாம்வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் பயோமெடிக்கல் இன்ஜினீயர்களின் தேவை அதிகரித்து வருகிறதுகடந்த ஐந்தாண்டுகளாக பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் கோர்ஸில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதுஒன்றிரண்டு கல்லூரிகளில் மட்டுமே இருந்த பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பானது தற்போது பல கல்லூரிகளில் தொடங்கி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.  

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவைப் படிக்கும்போதேமருத்துவத்துறை அறிவோடு கணினி தொழில்நுட்பம்மின்னணு தொழில்நுட்பம்நானோ டெக்னாலஜி போன்ற பல பிரிவுகளில் நிபுணத்துவம் பெறலாம்.  இவர்கள் படிக்கும்போதே மருத்துவத்துறையில் உள்ள தொழில்நுட்பம்மருத்துவ சாதனங்கள் மற்றும் கருவிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளலாம்நோய்க்கான சிகிச்சை முறைகளை உன்னிப்பாகக் கவனித்து அதற்கான தொழில்நுட்ப தீர்வை காணலாம்மருத்துவ சிகிச்சையளிக்கும்போது கருவிகளின் செயல்திறனை மேம்படுத்துதல்மதிப்பீடு செய்தல்சிகிச்சைக்குப் பாதுகாப்பான வகையில் மாற்றியமைத்தல் எனப் பல வகையில் உதவலாம்

இந்தியாவில் இளநிலை பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு வெளிநாட்டில் எளிதாக உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கிறதுஇத்தகைய வாய்ப்பையும் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது  பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவைப்போலவேபயோமெடிக்கல் சயின்ஸ் என்ற பி.எஸ்சி பிரிவையும் பல அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளனர்.  ஒரு சில இன்ஜினீயரிங் கல்லூரிகளில் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ற பெயரிலும் பயோமெடிக்கல் இஞ்சினியரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் என்பது சிறப்புப் படிப்புகளில் ஒன்று என்பதால் நல்ல கல்லூரியாகத் தேர்ந்தெடுத்துச் சேர வேண்டியது அவசியம்இந்திய அளவில்இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ..டி-க்களிலும்தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான என்..டி-யிலும் பயோமெடிக்கல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்இங்குச் சேர்ந்து படிக்க ஜேஇஇ   

(JEE ) நுழைவுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம்

பயோமெடிக்கல் இன்ஜினீயர் என்பவர் மருத்துவத்துறையினரோடு இணைந்து பணியாற்ற வேண்டி இருப்பதால் தகவல் தொடர்பியல் திறனையும் (Communication Skills) வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்மேலும்குழுவாக இணைந்து (Team Work) பணியாற்ற வேண்டி இருப்பதால் ஒருங்கிணைப்பு திறனோடு இருப்பது நல்லதுமருத்துவத் துறை பணிகளை மேம்படுத்த எவ்வாறு  தொழில்நுட்பத்தை உட்கொண்டு வருவது என்பது குறித்த சிந்தனையோடு பயோமெடிக்கல் பிரிவில் நுழைந்தால் இத்துறையில் சாதிக்கலாம்தற்போதுசெயற்கை உறுப்புகள் தயாரிப்புஅறுவை சிகிச்சைக்கு ரோபோவை பயன்படுத்துவதுபுதிய மருந்துகள் கண்டுபிடிப்புசிறுநீரக டயாலிசிஸ் என பயோமெடிக்கல் பிரிவில் பல விதமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன

பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் பிரிவின் துணை பிரிவுகளாகBiomedical Electronics, 

Biomaterials, 

Computational Biology, 

Cellular, Tissue and Genetic Engineering, 

Medical Imaging, 

Orthopaedic Bioengineering மற்றும் 

Bionanotechnology பிரிவுகள் உள்ளன

இத்தகைய பிரிவுகளில் நிபுணத்துவம் பெறலாம்

பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் படித்து முடித்தவுடன்பொதுத்துறை மற்றும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம்

மேலும்உயர்தர ஆராய்ச்சி மேற்கொள்ளும் மருத்துவமனைகள்உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள்ஆராய்ச்சி நிறுவனங்கள்கிளினிக் மற்றும் சுகாதார மேம்பாட்டு நிறுவனங்கள்காப்பீட்டு நிறுவனங்கள்உயிர் மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஆராய்ச்சி பொறியாளராக பணியாற்றலாம்


பல வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள்மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பி.டெக் பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்குகின்றன.

பயோமெடிக்கல் துறையில் போதுமான அனுபவத்தைப் பெற்ற பிறகு,  பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாஉலக சுகாதார நிறுவனத்திலும் வேலை வாய்ப்பை பெறலாம்.  இந்தியாவில்லார்சன் & டூப்ரோசிப்லா, , டெலாய்ட் கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்ஸ்ட்ரைக்கர் தொழில்நுட்ப மையம்சீமென்ஸ்பிபிஎல் ஹெல்த்கேர்விப்ரோ ஜி.இ மருத்துவ அமைப்புபிலிப்ஸ் ஹெல்த்கேர்ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ரிசர்ச்டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இன்க் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பை பெறலாம்

பல பொறியியல் துறை வேலை வாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது பயோமெடிக்கல் பொறியாளர்களுக்கு நல்ல  சம்பளம் கிடைக்கிறதுதுறையின் அனுபவம் அதிகரிக்கும்போது சம்பளமும் அதிகரிக்கிறதுஅமெரிக்காவில் பயோமெடிக்கல்  இன்ஜினீயர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ஆண்டுக்கு, 40,000 டாலர் வரை கிடைக்கிறதுமுதுகலை பயோமெடிக்கல் இன்ஜினியருக்கு ஆண்டு சம்பளமாக 60,000 டாலர் வரை கிடைக்கிறதுஇனி வரும் காலம் மருத்துவத் தேவை மிகுந்த காலம் என்பதால் பயோமெடிக்கல் பிரிவு ஏற்றமிகு பிரிவுகளில் முக்கிய இடத்தில் உள்ளது


 


கட்டுரையாளர்: - ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation