சென்னை,
ஹஜ் கமிட்டியின் புதிய உறுப்பினர்களாக அதிமுக எம்.பி. முகமது ஜான், கடையநல்லுார் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஹஜ் கமிட்டி பொறுப்புகள் மாற்றியமைக்கப்படும், ஹஜ் கமிட்டி சட்டப்படி தற்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,
அதிமுக ராஜ்யசபா எம்.பி, முகமது ஜான்,
மனிதநேய மக்கள் பேரவை தலைவர் தமிமுன் அன்சாரி,
முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர்,
நூருல் இஸ்லாம் அரபி கல்லுாரி அரபி பேராசிரியர் முகமத் அபுதாகீர் பாகவி,
சேலம் ஜமாத் உலமா மாவட்ட செயலாளர் மெளலானா ஷாகீப் அகமது,
ஷியா முஸ்லீம்கள் சார்பில் சென்னை - ஆயிரம் விளக்கை சேர்ந்த அமிதுல் அதீபா,
கோவை ஐக்கிய ஜமாத் பொதுசெயலாளர் அப்துல் ஜப்பார்,
சென்னை நந்தனம் சுப்ரீம் எடிகேஷனல் டிரஸ்ட் செயலாளர் லியாகத் அலிகான்,
தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி பொருளாளர் முகமது அஷ்ரப், காயிதே மில்லத் நல்வாழ்வு அசோசியேஷன் அமைப்பாளர் ஜவகர் அலி, வாணியம்பாடியை சேர்ந்த முகமது காசீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,