புனித ஹஜ் பயணம் ரத்து - ஹஜ் அசோசியேஷன் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2020 17:59

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக  2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக ரத்து  செய்யப்பட்டுள்ளது என்று  இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அபுபக்கர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளன, இந்த நிலையில் சவுதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து  எவ்வித உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.

எனவே இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ரத்து செய்ப்பட்டுள்ளது, ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்திவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்   அவர்களுக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்i