நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மீனா மாற்றம்

பதிவு செய்த நாள் : 30 மே 2020 20:07

சென்னை, 

 திருநெல்வேலி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து  உயர்கல்வித்துறை செயலாளர்  அபூர்வா வெளியிட்ட உத்தரவு வருமாறு

காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் திருச்செல்வம் மாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை எச்.எச்.தி.ராஜாஸை கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார், 

புதுக்கோட்டை ராஜா கல்லூரியின் முதல்வராக  இருந்த டாக்டர் சுகந்தி மாற்றம் செய்யப்பட்டு திருச்சி பெரியார்  ஈவெரா கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்,  

திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர் கே.எஸ் மீனா  காரைக்குடி அரசு கலைக் கல்லுாரியின் முதல்வராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்,