விசைத்தறிகளுக்கு வட மாநில கொள்முதல் ஆர்டர்கள் வராத காரணத்தால் விசைத்தறிகள் பரிதவிப்பு

பதிவு செய்த நாள் : 30 மே 2020 14:46

ஈரோடு

வெளிமாநில ஆர்டர்கள் கிடைக்காததால்  ஈரோடு பகுதி விசைத்தறியாளர்கள் முழு அளவில் உறப்த்தியைத் தௌவங்க முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

ஈரோடு பகுதியில் வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி அக்ரஹாரம், அசோகபுரம் உள்பட சுற்றுப்புற பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.  

பொது ஊரடங்கு காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த விசைத்தறிகள் தற்போது அரசு பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட தொடங்கியுள்ளன..  இருந்தாலும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை.  வீடுகளில் தறி வைத்துள்ளோர் மட்டும் சற்று கூடுதலாக இயக்கி வருகின்றனர்.   இந்நிலையில் வெளிமாநில ஆர்டர்கள் கிடைக்காததால்  விசைத்தறியாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

ஈரோடு பகுதியில்  உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தற்போது  ஆயிரத்துக்கும் குறைவான விசைத் தறிகளே  செயல்பட்டு வருகின்றன.  ஏற்கனவே ஊரடங்கு காரணமாக விசைத்தறிகள் மூடப்பட்டதால் இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 ஈரோட்டுக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்கும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி பகுதிகளில் இன்னும் ஜவுளி சார்ந்த கடைகள், சாய சலவை ஆலைகள் இயக்கத்துக்கு வரவில்லை. 

இம்மூன்று மாநிலங்களில் காடா துணியாகவும் புராசஸ் செய்யப்பட்ட  துணியாகவும் வாங்குவார்கள்.  பிற மாநிலங்களில் பரவலாக கொள்முதல் செய்வார்கள் புதிய ஆர்டர் வராத நிலையில் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பெற்ற ஆர்டர்களில் பல ரத்தானதால் உற்பத்தி பாதித்துள்ளது.  வடமாநிலங்களில் ஆர்டர் வழங்கினால் மட்டுமே முழு அளவில் தறிகளை இயக்க முடியும் இது பற்றி அரசு ஆய்வு செய்து விசைத்தறியாளர்களுக்கு தேவையான   உதவிகள் செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.