லாக்டவுன் மொபைல் கேம் “லூடோ கிங்”

பதிவு செய்த நாள் : 24 மே 2020 13:48

இன்று தொழில்நுட்பமும், இணையதளமும் ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. என்ன, எது யாரால் டிரண்டிங் ஆகும் என்று சொல்ல முடியாது. 'நண்ப ர்கள்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த நேசமணி காமெடியை பார்த்து பார்த்த நமக்கு சளித்துபோனோலும், சில மாதங்களுக்கு முன் அந்த நேசமணி என்ற ஒற்றை சொல் உலகளவில் டிரண்டானது ஓர் ஆச்சரியத்தை தோற்றுவிக்கிறது அல்லவா. அப்படி ஒன்றுதான் மொபைல் கேம்களில் ஒன்றான 'லூடோ கிங்' ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.

நாம் சிறுவயதில் ஸ்னேக்&லேடர் என்ற பரமபத அட்டையை வாங்கி தருமாறு அடம்பிடித்து வாங்கியிருப்போம். அந்த அட்டைக்கு பின்னாடி லூடோ எப்படி விளையாட வேண்டுமென்று விவர குறிப்புகள் இருக்கும். ஆனால் நாம் ஸ்னேக் அண்ட் லேடர் என்ற பரமபத விளையாடை விளையாடி அட்டையை கிழித்ததுதான் மிச்சம். ஒருமுறை கூட லூடோ விளையாடி இருக்கமாட்டோம். ஆனால் இன்று லு லூடோ செயலியை  நண்பர்களுடன் இணைந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாடை ராயல் கேம் என்று சொல்வது உண்டு. காரணம். அரசாட்சி நடைபெற்ற காலங்களில் அரண்மனகளில் அரசர்களும் மகாராணிகளும் விளையாடிய விளையாடாகும்.

தற்போதைய உலக வரலாற்றை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என பிரித்து பார்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதேபோல் முழுக்கு முழுக்க இந்தியாவிலேயே இந்தியர்களால் உருவாக்கிய லு£டோ கிங் செயலிழை லாக் டவுனுக்கு முன், பின் என பார்க்கும்போது அபாரமாக வளர்ச்சியை அடைந்து நிற்கிறது. அதற்கு சின்ன உதாரணம்...

இன்றைய சூழலில் லூடோ கிங் என்னும் பெயரை  பற்றி நாம் கேட்காமல் கடந்து வந்திருக்கலாம், சிலர் விளையாடி கொண்டிருக்கலாம், சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கலாம் இல்லை மீம்ஸ் மூலம் அறிந்திருக்கலாம். இன்று மீம்ஸ் மூலம் லூடோ கிங் போடும் அளவுக்கு ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறதுதான் உண்மை.

இன்று இந்தியாவில் ஆண்ட்ராய்டு இல்லை ஐ.ஒ.எஸ்., இயங்குதளங்களில் நம்மவர்கள் விளையாடும் செயலில் முதன்மையாக விளங்குவது லூடோ கிங். இது உருவான விதத்தையும், இதற்கு உயிர்கொடுத்த விகாஷ் ஜெய்ஸ்வாலை பற்றி அறிந்து கொள்ளும்போது சோர்ந்து போயிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு விணையுக்கியாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

ஒரு கனவு நனவாக வேண்டுமானால் தேடுதல், உழைப்பு, வெற்றிக்கு காத்திருப்பு இவை அனைத்தும் ஒன்று சேரும் தருணம் உருவாகும் போதுதான் வெற்றி கிடைக்கும். அதற்கு உதாரணம் விகாஷின் வாழ்க்கை.

விகாஷ்க்கு பீகாரிலுள்ள பாட்னாதான் சொந்த ஊர். இவருக்கு இரண்டு வயதுயிருக்கும் போது தந்தையை இழந்துவிட்டார். இவர் அம்மா, சகோதரன் என்று ஒரு சின்ன குடும்பம். தந்தை இறந்ததால் கிடைக்கும் பென்ஷனில் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது.

எனது 17 வயதில் எங்கள் ஊரில் செயல்பட்டுக் கொண்டிருந்த கேம் பார்லரை அரசு உத்தரவால் திடீரென்று மூடிவிட்டார்கள். எனக்கு கேம் விளையாட வேண்டும் என்று கொள்ளை ஆசை. நான் பெரியவனாகி சொந்தமாக ஒரு கேமை வாங்கி நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்பது என் டீன் ஏஜ் பருவத்தில் கனவாக இருந்தது என்கிறார் விகாஷ். இவருடை அம்மாவோ இல்லை சகோதரனோ நீ எதிர் காலத்தில் என்ன வாகபோய்கிறாய் என்று இவரிடம் எப்போதும் கேட்டது இல்லையாம். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றை மட்டும் அறிந்துள்ளனர் இவனிடம் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பதை.

பள்ளிப் படிப்பை முடித்த விகாஷுக்கு, மென்பொருள் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம், இன்றைய தேதிக்கு, அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது விகாஷின் எண்ணம். அதற்கான நுழைவுத் தேர்வுக்காகத் தயாரானார். இரண்டு வருட முயற்சிக்குப் பின்னர்தான், கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்தது. இடையில் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் அனிமேஷன், கிராபிக் டிசைன் மற்றும் 3டி வகுப்புகளுக்கும் சென்றுவந்தார்.

கணவனை இழந்த என் அம்மா என்னையும் அண்ணனையும் பொறியியல் படிக்கவைப்பது என்பது அப்போது கஷ்டமான விஷயம். நான் எனக்கு கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது என கேட்டேன். என் அம்மாவும் அண்ணனும் கஷ்டப்பட்டு எனக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தார்கள். என் வகுப்பிலுள்ள மாணவர்களில் பலபேர் கம்ப்யூட்டரில் படம் பார்த்தனர். நான் அதில் கம்ப்யூட்டர் சார்ந்த இதழ்களையும் அன்று இலவசமாக கிடைக்கும் மென்போருள் சிடிகளை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

திடீரென்று ஒரு கேமிங் சிடி கிடைத்தது. அதைகொண்டு ஓர் இரவு முழுவதும் யோசித்து யோசித்து `எக்கி பாய் (Eggy boy) ’ என்ற கேமை உருவாக்கினேன். நான் உருவாக்கிய கேம் மற்ற கேம்களை விட சிறப்பாக உள்ளது என்று பல பத்திரிகைகள் தேர்ந்தெடுத்தன. அதோடு என்னுடன் படித்த மாணவர்களும் என் கேமை வைத்து விளையாடினார்கள்" என தன் கல்லூரி பருவத்தை விவரித்தார் விகாஷ்.

கல்லூரி படிப்பை முடித்ததும் மும்பையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியா கேம்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அப்பணி அவருக்கு திருப்தி அளிக்க வில்லை. அதனால் பணிபுரிந்துக் கொண்டே கேமிங் கன்டென்ட் இணையதளங்களை உருவாக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்க துவங்கினார். இதில் கிடைக்கும் வருமானம் தான் மாதம் சம்பளமாக பெறும் பணத்திற்கு இணையாக இருந்ததால் வேலையை விட்டு விலகினார். பின்னர் தனியாக கேமிங் மற்றும் இணையதளங்களை உருவாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

விகாஷ் 2010ல் நவி மும்பையில் கேமிதியான் டெக்னாலஜிஸ் (Gametion Technologies) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு முதலீடே இரண்டு லட்ச ரூபாய் மட்டும்தான். அந் நிறுவனத்தில் ஏழு பேர் கொண்ட ஒரு சிறிய டீம் மற்றும் சில கம்ப்யூட்டர்கள் அவ்வளவுதான். "பணம் சம்பாதித்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கேம்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினோம்" என்றார்.

இப்படி கேம்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது 2013ம் ஆண்டில் லூடோ விளையாட்டை கேமாக உருமாற்றி மொபைல் போனுக்கு கொண்டு வந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. என்னுடைய டீமிலிருந்த ஏழு பேரில் மூன்று பேர் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களில் எவருக்குமே லூடோ விளையாட்டை இதுவரை விளையாடியது இல்லை. லூடோ விளையாட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ரூல்ஸ் கொண்டு விளையாடக் கூடியதாகும். லூடோவை  மொபைல் தளத்திற்கு கொண்டும் வரும்போது அந்த ரூல்ஸ் எல்லாம் எளிதாக இருக்கும் வகையில் கேமை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் இருக்கினோம். கடுமையான முயற்சியால் 2016ம் லூடோ கிங் அறிமுகப்படுத்தினோம்" என்றார்.

லூடோ கிங் அறிமுகமானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் கொரோனாவுக்காக லாக் டவுன் அறிவித்திருந்து இது வேறு வடிவத்தை அடைந்தது. மார்ச் 24ம் தேதி லாக் டவுன் அறிவித்த பின் லூடோ கிங் கேமை விளையாடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பல்கி பெருகியது.

அதிலும்தூர்தர்ஷனில் மகாபாரதம் மறு ஒலிப்பரப்பு முடிந்ததும் எங்களது லூடோ கிங் கேமை நிறைய பேர் விளையாட துவங்கியதால் எங்கள் சர்வர்கள் திணறிப்போனது.

ஒரே நேரத்தில் பலர் விளையாட வருவதால், எங்களிடம் இருக்கும் சர்வர்கள் கடும் சிக்கலைச் சந்தித்தது. எங்கள் தொழில்நுட்ப டீம் கடுமையாக 3 நாள்கள் வேலைபார்த்து, சிக்கலை முடிவுக்குக் கொண்டுவந்தனர். அதுவரை 8 சர்வர்களுடன் இயங்கிய நிறுவனம், தற்போது 200 சர்வர்களுடன் இயங்குகிறது. காரணம், லூடோ கிங்.

கொரோனாவுக்கான லாக்டவுன் அறிவிப்பதற்கு முன் லூடோ கிங்கை ஒரு நாளைக்கு 10 லிருந்து 1.3கோடி பேர் விளையாடி வந்தார்கள். இதை மாதக் கணக்கில் பார்த்தோமானால் 6 கோடி முதல்  6.5 கோடி என இருந்தது. லாக்டவுன் அறிவித்த பின்னர் தினசரி 5கோடி  என எகிறியது. மாதத்திற்கு சாரசரியாக 18.5 கோடியை இப்பொழுது கடந்திருக்கிறது.

மேலும், இந்திய மொபைல் கேம்கள் இதுவரை 10 கோடி பதிவிறக்கம் என்ற நிலையைத் தொட்டதில்லை. ஆனால், லூடோ கிங் தற்போது வரை 35 கோடிக்கும்அதிகமான இன்ஸ்டால்களைப் பெற்றிருக்கிறது.

2019 நிதியாண்டில், எங்கள் நிறுவனம் அறுபது லட்சம் டாலர் அளவுக்கு டர்ன்-ஓவர் செய்தது.

அதுவே 2020 நிதியாண்டில், அதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். ஏழு பேருடன் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது 70 பேர் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

அதோடு சென்சார் டவர் என்ற நிறுவனத்தின் புள்ளிவிவர கணக்குகளின்படி, லூடோ கிங் மட்டும் மார்ச் மாதத்தில் சுமார் 30 ஆயிரம் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது . 40 வயதாகும் விகாஷ், தற்போது கேமிங் உலகின் புதிய சென்சேஷன் ஆகியிருக்கிறார்.  லூடோ கிங் விளையாட்டில் அடுத்து என்ன அப்டேட் என்றுகேட்டால், `` நான்குக்கும் அதிகமான நபர்கள் விளையாடும்படியான அப்டேட் விரைவில் வரும். கூடவே, ஆடியோ சாட் ரூம் என்ற ஆப்ஷனும் வழங்க இருக்கிறோம்” என்கிறார் தைரியமாக!

லூடோ கிங் பதிவிறக்கம்

லூடோ கிங் கேம்மை விளையாட வேண்டுமானால் செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ, லேப் டாப்பிலோ கூகுளை ஓப்ன் செய்து லூடோ  கிங் என்று டைப் செய்தால் அந்த அப் வரும் அவற்றை டவுன்லோடு செய்து ஸ்டால் செய்தால் லூடோகிங் கேம் விளையாட்டைத் துவக்கலாம்.


செய்தியாளர்: குட்டிக்கண்ணன்