இலவச மின்சாரம் ரத்தாகாது; அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:29

மதுரை

விவசாயிகளின் நண்பனான தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்துச்செய்ய மாட்டார். காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக் கொள்வதற்குத் தான் போராட்டம் அறிவித்துள்ளது என கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

சுகாதார பணிகள் மட்டுமல்லாது 102 வாகனங்கள் மூலம் 100 வார்டுகளிலும் காய்கறிகளை மதுரை மாநகராட்சி வழங்கியது. இதனால் மதுரையில் நோய்த் தடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் கோயம்பேடை அப்படியே விட்டமாதிரி மதுரையில்  விடவில்லை. 

அதுமட்டுமல்ல, மதுரை மாநகராட்சி பகுதியில் சுமார் 4 லட்சம் வீடுகளுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்யாது. அதன் பின் ஏன் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக போராட்டம் நடத்துகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

நோய்க்கு தடுப்பூ சி கண்டு பிடிக்கும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 ஆரப்பாளையம், பெத்தானியாபுரம் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு கப சுர குடிநீர், ஜின்க் மாத்திரைகள், மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும் பொழுதும் இதே கருத்துகளைத் தெரிவித்தார்.