ஆர்எஸ் பாரதி கைது நடவடிக்கை எதிரொலி: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள். எம்எல்ஏக்கள் கூட்டம் -

பதிவு செய்த நாள் : 23 மே 2020 15:25

சென்னை, 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதை தொடர்ந்து அடுத்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள். மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நாளை (24-5-2020) கூட்டியுள்ளார்.

இந்த கூட்டம்  நாளை காலையில்  வீடியோ கான்பிரஸ்சிங் மூலம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

திமுக மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் , நாளை காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும்,  அப்போது மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல்  இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய்வழக்குகள் புனைவது: சட்டவிரோத ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் குறித்து  விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,