மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணி - அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தொடங்கினார்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 13:44

மதுரை

மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு பணியாக பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடியினை ஆணையாளர் விசாகன்  தலைமையில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ  இன்று  வழங்கினார்.

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக பெத்தானியாபுரம் பகுதியில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை ஆணையாளர் விசாகன் தலைமையில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ  இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார்.