சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை

பதிவு செய்த நாள் : 23 மே 2020 12:36

சேலம்,

கொரோனா பரவல் தடுப்பு பணி மற்றும் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை சேலம் வந்தார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி, நிவாரண உதவித் தொகை, குடிமராமத்து பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.