சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 23 மே 2020 10:24

சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 14,753 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உள்ளனர். 7,128 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நிலவரம் :

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9,364ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் 5,461 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தவர்கள் 3,791 பேர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  சென்னையில் இதுவரை 66 பேர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது. சென்னையில் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக இராயபுரத்தில் 1768 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகரில் 1079 பேருக்கும்,

ராயபுரத்தில் 1768 பேருக்கும்,

கோடம்பாக்கத்தில் 1300 பேருக்கும்

தேனாம்பேட்டையில் 1000 பேருக்கும்,

அண்ணாநகரில் 783 பேருக்கும்

தண்டையார்பேட்டையில் 881 பேருக்கும்,

மணலியில் 115 பேருக்கும்

மாதவரத்தில் 192 பேருக்கும்,

அம்பத்தூரில் 402 பேருக்கும்

திருவொற்றியூரில் 250 பேருக்கும்,

வளசரவாக்கத்தில் 650 பேருக்கும்,

அடையாறில் 513 பேருக்கும்,

ஆலந்தூரில் 100 பேருக்கும்,

பெருங்குடியில் 137 பேருக்கும்,

சோழிங்கநல்லூரில் 148 பேருக்கும்,

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.