இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலி எண்ணிக்கை 3,720ஆக உயர்ந்துள்ளது

பதிவு செய்த நாள் : 23 மே 2020 10:13

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 3,720  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,101ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா வைரஸ்  பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 137 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 3,720ஆக உயர்வடைந்து உள்ளது. 

51 ஆயிரத்து 783 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து உள்ளனர்.

69 ஆயிரத்து 597 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,101ஆக உயர்வடைந்து உள்ளது.

மகாராஷ்டிரா மநிலத்தில் – 44,582 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,517 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத்தில் – 13,268 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 802 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியில் – 12,319 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் – 6,494 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 153 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் – 6,170 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 272 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் – 5,735 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திராவில் – 2,709 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தெலங்கானாவில் – 1,761 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் – 14,753 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கேரளாவில் – 732 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் – 1,743 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் – 3,332 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் உயிரிழந்து உள்ளனர்.