தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது

பதிவு செய்த நாள் : 22 மே 2020 18:09

சென்னை

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 786 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 786 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 9,364 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டில் இன்று 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது

காஞ்சிபுரத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது

திருவள்ளூரில் இன்று 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 92 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்காக தற்போது வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,524 பேர்

கொரோனா தொற்றால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 846- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா தொற்றால் பாதித்தவர்களில் இதுவரை 7,128- பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 48.32 % பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 12,046 பேருக்கு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான  பரிசோதனை நிலையங்கள் 67 (41 அரசு + 26 தனியார்) .

கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் விவரம் (22.05.2020) மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளது.