காவிரி டெல்டாவை தூர் வார ரூ 6,724 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தமிழக அரசு புதிய உத்தரவு

பதிவு செய்த நாள் : 22 மே 2020 16:48

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களில்  குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்த  ரூ 6724 .75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது திட்டப்பணிகளை  வேகமாக நிறைவேற்றுவதற்காக  சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் துார்வாருவதற்கான குடிமராத்து திட்டத்தை விரைவாக நிறைவேற்ற  கண்காணிப்பு அதிகாரிகளாக  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள  மண்ணை அகற்றி தூர் வாரவும் காவிரி வழியாக உள்ள கால்வாய்கள், குளங்களை  சீரமைக்கவும் 392 பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது,  இதற்காக அரியலுார் கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 2020-21 ஆம் ஆண்டில்  392 திட்டப்பணிகளை 38 தொகுப்புகளாக நிறைவேற்ற  ரூ 6724 .75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மேற்கண்ட மாவட்டங்களில்  10 நாட்களில் திட்டப்பணிகளை வேகமாக நிறைவேற்றும் வகையில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,

அதன் விபரம் வருமாறு:

1, தஞ்சாவூர் -  வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றம் வேளாண்துறை  முதன்மை செயலாளர் ககன்தீப் பேடி

2, திருவாரூர்-  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை  முதன்மை செயலாளர் ராஜேஷ்லக்கானி,

3, நாகப்பட்டினம் - பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன்,

4, புதுக்கோட்டை - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,

5, கரூர் - கால்நடைபராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் கே.கோபால்,

6, திருச்சி- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக்,

7, அரியலுா் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார்  

ஆகிய அதிகாரிகள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு துார்வாரும் பணிகள் நிறைவேற்றப்படுவதை ஆய்வு மேற்கொள்வர்,  இந்த அதிகாரிகள் தங்களது அறிக்கைகளை தலைமை செயலாளருக்கும்  முதல்வரின் அலுவலகத்திற்கும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கும் அனுப்பி வைப்பார்கள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளின் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஒருங்கிணைப்பார்,  சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற  பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருடன் ஒருங்கிணைக்க   முதன்மை பொறியாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அந்த உத்தரவில்  தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்,