அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ்சிடம் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 22 மே 2020 14:49

சென்னை,

அதிமுக தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்,

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, சென்னை கோவை, வேலுார் மற்றும் மதுரை ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து அண்மையில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர்,

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்திற்கு செயலாளராக அஸ்பையர் சுவாமி நாதனும்,

திருவண்ணாமலை, கடலுார் விழுப்புரம் ஆகியவை அடங்கிய வேலுார் மண்டலத்திற்கு செயலாளராக கோவை சத்யனும்,

கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்திற்கு செயலாளராக சிங்கை ராமசந்திரனும்,

மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி துாத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்கள் அடங்கிய மதுரை மண்டலத்திற்கு வி.விஆர் ராஜ்சத்யனும் மண்டல செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்,

இவர்கள் நால்வரும் இன்று சென்னையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான
ஓ. பன்னீர்செல்வம்  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஆகியோரை  இன்று (22.5.2020 - வெள்ளிக் கிழமை) சந்தித்து வாழ்த்து பெற்றனர்,