அமெரிக்ககாவில் கோவிட் 19 வைரசுக்கு மூன்றாவது இந்திய மருத்துவர் பலி

பதிவு செய்த நாள் : 21 மே 2020 21:22

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மற்றொரு இந்திய-அமெரிக்க மருத்துவர் கோவிட் -19 காரணமாக உயிரிழந்தார். இதன் மூலம் அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய  மருத்துவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

கோவிட் -19 நோயால்  நியூயார்க்கின் சவுத் ரிச்மண்ட் ஹில்லில் உள்ள  மருத்துவ நிபுணர் டாக்டர் சுதீர் எஸ் சவுகான், மே 19 அன்று உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் சங்கமும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

மேற்கத்திய நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் -19 ஆல் உயிரிழந்துள்ளனர்.

 நியூயார்க்கில் கடந்த மாதம், ஐந்து மருத்துவர்களைக் கொண்ட ஒரு இந்திய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை-மகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று இந்திய -அமெரிக்க மருத்துவர்கள் தங்கள் உயிருக்கு போராடுவதாகக் கூறப்படுகிறது.