தமிழக அரசு செலவில் 20 % குறைக்க முடிவு

பதிவு செய்த நாள் : 21 மே 2020 19:18

சென்னை,

தமிழக அரசு தனது மொத்த செலவில் 20 சதவீதம் குறைத்துக கொள்ள முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசு நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், கொரோனாபரவுவதைத் பொது  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் தொழில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.அர்சின் வருமானமும் குறைந்தது. அதனால் அரசு செலவினங்களை குறைப்பது என தமிழக அரசு  முடிவு செய்துள்ளது.

அரசின் மொத்த செலவில் 20 சதவீதம் அளவுக்கு குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அர்சின் அனைத்துப் பிரிவுகளும் செலவுகளைக குறைக்க   அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

அரசு விழாக்களில் இனி பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை  தவிர்க்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.

 மாநிலத்திற்கு வெளியே செல்லும் அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரச் செலவகளை 25% குறைத்து கொள்ள அரசின் எல்லா துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அலுவலக தேவைகளுக்கு மேஜை, நாற்காலிகள் வாங்குவதை 50% வரை குறைக்கப்பட வேண்டும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதேபோன்று நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மதிய விருந்து, இரவு விருந்துகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

உபகரணங்களை கொள்முதல் செய்வதில் சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு  அரசாணையில் தெரிவித்து உள்ளது.