உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக போர்டு தலைவராக ஹர்ஷ்வர்தன் நியமனம்

பதிவு செய்த நாள் : 20 மே 2020 19:46

புதுடெல்லி

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக போர்டு தலைவராக இந்திய அரசின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ஹர்ஷ் வர்தன் மே மாதம் 22ஆம் தேதி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகம் என்பது மருத்துவ தகுதி உடைய உறுப்பினர்களை கொண்டதாகும். இந்த கோடிங் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த கோடிங் தலைவராக உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய குழுக்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக நியமனம் செய்ய உரிமை உண்டு இதன்படி இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வரும் மே மாதம் 22ம் தேதி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் அவர் மூன்று ஆண்டு காலம் பதவியில் இருப்பார் என தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய உறுப்பினர் என்ற முறையில் ஹர்ஷ்வர்த்தன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார்.