கரோனா வைரஸ் தொடர்பாக டபிள்யு எச் ஓ நடவடிக்கைகள் குறித்து சுயேச்சையான ஆய்வு நடத்த முடிவு

பதிவு செய்த நாள் : 20 மே 2020 17:42

ஜெனிவா

ஜெனீவாவில் இருந்து விடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவை கூட்டத்தில் கரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து காலக் கிரம முறையில் சுயேச்சையான நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் எல்லாம் ஏகமனதாக முடிவினை மேற்கொண்டன.

உலக சுகாதார நிறுவன பொதுப்பேரவை மில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகள் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை ஐரோப்பிய யூனியன் முன்மொழிந்தது.

கரோனா வைரஸ் தோன்றிய நாளிலிருந்து 3 18 000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 48 லட்சம் பேர் கரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐரோப்பிய யூனியன் முன்மொழிந்த தீர்மானம் தெரிவித்தது எனவே உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து காலவரிசையில் ஆய்வு நடத்துவது அவசியம் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு அமெரிக்கா பங்கு கொள்ளவில்லை. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவை கூட்டம் நடந்த இரண்டு நாட்களிலும் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தின் கடுமையாகச் சாடியது சீனாவின் கைப்பொம்மையாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார் ஒரு மாத காலத்துக்குள் உலக சுகாதார நிறுவனம் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் உலக சுகாதார நிறுவன அமெரிக்காவின் நிதி பங்களிப்பை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என அவர் எச்சரித்தார்.

ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் உலக சுகாதார நிறுவன த்தை குற்றம்சாட்டும் அதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று குறிப்பிட்டனர் இப்பொழுது உலக சுகாதார நிறுவனத் துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் ஆய்வு வரவேற்பதாக முதலில் தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் அதன் நிதி நிலை உட்பட பல விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் காண அமெரிக்காவின் நிதி பங்களிப்பு நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க இந்தியா மறுத்துவிட்டது. நாங்கள் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க போராடி வருகிறோம் எங்களது முழுக் கவனமும் இப்பொழுது இந்தியாவில் தான் உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து நாங்கள் பின்னர் பரிசீலித்து கருத்து தெரிவிப்போம் என்று இந்தியா குறிப்பிட்டது.