உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒரு மாத அவகாசம்: டிரம்ப் மிரட்டல்

பதிவு செய்த நாள் : 19 மே 2020 20:04

வாஷிங்டன்

உலக சுகாதார நிறுவனம் தனது போக்கை மாற்றிக் கொள்ள ஒரு மாத காலம் அவகாசம் தருவதாகவும் அந்த ஒரு மாத காலத்தில் நம்பத்தகுந்த சான்றுகளை உலக சுகாதார நிறுவனம் தரவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்று டுவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.

உலக சுகாதார நிறுவனம் முக்கியமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிரந்தரமாக அதற்கான நிதி அளிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த போவதாகவும் எச்சரித்தார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார நிறுவனம் விடியோ கான்பரன்சிங் முறையில் தனது பொது பேரவை கூட்டத்தை நடத்தி வரும் பொழுது இந்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸிற்கு விடுத்துள்ளார்.

அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிப்பணம் அமெரிக்க மக்களின் நலனுக்கு பயன்படாத ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து போய்ச் சேருவதை நான் அனுமதிக்க முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவைக் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான நடவடிக்கைகளில் சீனா முறையாக நடந்து கொண்டது என்றும் தன் வசம் இருந்த எல்லாத் தகவல்களையும் உலக நாடுகளுக்கு தந்தது என்றும் குறிப்பிட்டார் அதுமட்டுமல்ல கரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக எல்லாத் தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் பரவுதல் முடிவுக்கு வந்ததும் இந்த வயது எங்கிருந்து வந்தது எப்படி பரவியது என்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனமே தன்னுடைய நிபுணர் குழு மூலமாக ஆய்வு நடத்தலாம் என்றும் சீனா அதிபர் தெரிவித்தார்.

அவருடைய கருத்தில் இருந்து சற்று சற்று வித்தியாச பட்ட உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் கடந்த கால அறிவியல் சம்பவங்களின் அடிப்படையில் நிபுணர் குழு ஒன்றின் மூலம் ஆய்வு நடத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் 62 நாடுகள் கையெழுத்திட்ட தீர்மானம் ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த தீர்மானத்தின்படி கரோனா வைரஸ் தொடர்பான அறிவியல் சம்பவங்களின் அடிப்படையில் சுயேச்சையான நிபுணர்கள் குழுவொன்று கரோனா வைரஸ் உலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது கருணா வைரசுக்கு எதிராக அறிந்து தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன.  இந்த தடுப்பூசி மருந்துகளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டால் அவற்றை உலக நாடுகள் பயன்படுத்த சீனா அனுமதிக்கும் என்றும் சீன அதிபர் குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளின் குழு ஒன்று இந்தியா மற்றும் 62 நாடுகள் சேர்ந்து தாக்கல் செய்த தீர்மானத்தில் வரவேற்பதாக கூறியுள்ளன கருணா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அது ஏழை நாடுகளுக்கும் தேவையான நாடுகளுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் அதற்கான செலவுகளை ஏழை நாடுகள் மீது திணிக்கக் கூடாது என்று கோரியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் தாக்கல் செய்த திருமணம் குறித்தும் ஆப்பிரிக்க நாடுகளின் கோரிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனத்தின் பொதுப்பேரவை செவ்வாய் அன்று இரவு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.