அதிமுகவில் அதிரடி மாற்றம்: ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் ரத்து - இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 19 மே 2020 18:16

சென்னை, 

 அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்,

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது ஊராட்சி கழக செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறுஅந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,