தான் பிறந்த மருத்துவமனைக்கு இன்குபேட்டரை நன்கொடையாக வழங்க 21 ஆயிரம் பவுண்டுகளை திரட்டிய 6 வயது சிறுவன்

பதிவு செய்த நாள் : 18 மே 2020 22:26

லண்டன்,

பிரிட்டனில் வசிக்கும் 6 வயது இந்திய வம்சாவளி சிறுவன் தில்லன் மங்கு ஒரு புதிய இன்குபேட்டருக்காக,  21,000 பவுண்டுகளை (சுமார் ரூ. 19,28,623) திரட்டியுள்ளார். தான் குறைப்பிரசவத்தில் பிறந்த  சர்ரேயின் கிங்ஸ்டன் மருத்துவமனைக்கு அந்த இங்குபேட்டரை நன்கொடையாக வழங்கவுள்ளார்.

சர்ரேயில் வசிக்கும் தில்லன் மங்கு தனது நான்கரை வயதில், இன்குபேட்டர் மூலமாக தனது சொந்த உயிர் எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பதை அறிந்தவுடன், “சீக்கிரம் வெளியே வரும் குழந்தைகளுக்கு ஒரு இன்குபேட்டரை வாங்கலாமா?” தனது தாயிடம் கேட்டார்.

அதற்கு அவரது தாயும் சம்மதிக்க தில்லன் இன்குபேட்டர் வாங்க நிதி திரட்டினார். கடந்த வியாழக்கிழமை தில்லன் தனது இலக்கை அடைந்தார். மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான பிரிவுக்கு தி ஜிராப் ஃபீ (The Giraffe)  என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய இன்குபேட்டரை வாங்க தில்லனுக்கு 18 மாதங்கள் பிடித்தது.

தில்லன் அவரது உண்டியலில் நாணயங்களை சேகரிப்பதன் மூலம் தொடங்கினார். உண்டியல்கள் நிறைந்தபோது, அவரது பெற்றோர் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிகாரிகள் அவரிடம் 1,500 பவுண்டு மதிப்புள்ள நாணயங்கள் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் தில்லன் தன் இலக்கிலிருந்து ஒருபோதும் கவனத்தை இழக்கவில்லை.

இந்த ஆண்டு மார்ச் மாதம்  பிரிட்டனில் கோவிட் -19 காரணமாக ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்ட போது, தில்லன் தனது சுற்றுப்புறத்தில் ஒரு காபி ஸ்டாலை அமைத்து, கோல்ஃப் தினம் மற்றும் நிதியுதவிக்காக ஓட்டப்பந்தயத்தையும் ஏற்பாடு செய்து, 16,000 பவுண்டுகள் திரட்டினார்.

பிரிட்டிஷ்-ஆசிய பாடகர் ஜே சீன், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் ஜுவான் மாதா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்கும் ஆன்லைன் ரசிகர் மன்றமான பாரத் ஆர்மி போன்றவர்களிடமிருந்தும் ஆன்லைன் நிதி திரட்டும் தளமான ஜஸ்ட்கிவிங் மூலமாகவும் அவர் நன்கொடைகளைப் பெற்றார்.

இங்கிலாந்தில் ஊரடங்கை அமல்படுத்தியபோது தில்லனிடம் 5,000 பவுண்டுகள் குறைவாக இருந்தது.

"நான் செய்ய விரும்பியதை இரண்டு சுவரொட்டிகளாக செய்தேன். கருப்பு கெட்டி திரவத்தில் சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோ பொம்மைகளும் சிறுமிகளுக்கு இளஞ்சிவப்பு கெட்டி திரவத்தில் யூனிகார்ன் பொம்மைகளை செய்ய விரும்பினேன்.

தில்லன் தனது யோசனையை இங்கிலாந்து ஆடை பிராண்டுகளான பிரட்டி லிட்டில் திங் மற்றும் கமனி குடும்பமான பூஹூ ஆகியவற்றின் பில்லியனர் நிறுவனர்களிடம் தெரிவிக்க முடிவு செய்தார்.

அவரது தாயார் ஷார்ன் தனது மகனின் திட்டத்தைப் பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் கதையை உருவாக்கி, கமனி குடும்பத்தினரை டாக் செய்தார்.

சிறுவன் தில்லனின் யோசனையால் ஈர்க்கப்பட்ட அவர்கள் இறுதி £ 5,000 பவுண்டுகளை  நன்கொடையாக அளிக்க முடிவு செய்தனர். இதனால் சிறுவன் தில்லன் மகிழ்ச்சி அடைந்தான்

"நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இன்குபேட்டர்கள் குழந்தைகளை உயிருடன் வைத்திருப்பதால் நான் இதைச் செய்தேன். நான் பெரியவனாகும் போது ஒரு டாக்டராக விரும்புகிறேன். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று தில்லன் செய்தியாளர்களிடம் கூறினார்.